உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவீதம் அதிகரிப்பு: மகளிர் ஆணையத் தலைவர் குமரி பேட்டி

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவீதம் அதிகரிப்பு: மகளிர் ஆணையத் தலைவர் குமரி பேட்டி

கோவை: கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், தாக்கப்பட்ட இளைஞர் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவியை, மருத்துவமனைக்கு நேரில் சென்று, தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி விசாரணை நடத்தினார். இது குறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாதிக்கப்பட்ட மாணவியிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், அறிக்கை தயாரிக்க இருக்கிறேன். இந்த வழக்கை ஒரு மாதத்துக்குள் முடிக்க, முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். அதனால், விசாரணை விரைவாக நடந்து வருகிறது. இந்த கொடூரமான குற்றத்தை செய்தவர்களுக்கு, கண்டிப்பாக கடுமையான தண்டனை கிடைக்கும். 2022ம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் குற்றங்கள் 40 முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. மகளிர் ஆணையத்துக்கு வரும் புகார் மனுக்கள் அடிப்படையில் இதை சொல்கிறேன். பெண்கள் மத்தியில் இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. முன்பு எல்லாம் சமூகத்துக்கு பயந்து கொண்டு, வெளியில் சொல்லாமல் இருந்தனர். இன்றைக்கு, பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நினைக்கின்றனர். அதனால் புகார் மனுக்கள் அதிகரித்துள்ளன. மகளிர் ஆணையம், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை