உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவீதம் அதிகரிப்பு

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவீதம் அதிகரிப்பு

கோவை: கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், தாக்கப்பட்ட இளைஞர் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவியை, மருத்துவமனைக்கு நேரில் சென்று, தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி விசாரணை நடத்தினார்.

இது குறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட மாணவியிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், அறிக்கை தயாரிக்க இருக்கிறேன். இந்த வழக்கை ஒரு மாதத்துக்குள் முடிக்க, முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். அதனால், விசாரணை விரைவாக நடந்து வருகிறது. இந்த கொடூரமான குற்றத்தை செய்தவர்களுக்கு, கண்டிப்பாக கடுமையான தண்டனை கிடைக்கும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hoeaw4g3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02022ம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் குற்றங்கள் 40 முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. மகளிர் ஆணையத்துக்கு வரும் புகார் மனுக்கள் அடிப்படையில் இதை சொல்கிறேன். பெண்கள் மத்தியில் இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. முன்பு எல்லாம் சமூகத்துக்கு பயந்து கொண்டு, வெளியில் சொல்லாமல் இருந்தனர். இன்றைக்கு, பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நினைக்கின்றனர். அதனால் புகார் மனுக்கள் அதிகரித்துள்ளன. மகளிர் ஆணையம், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Chandran
நவ 05, 2025 20:16

விழிப்புணர்வு எங்கே உள்ளது பெற்று வளர்த்து படிக்க வைத்து வேலையும் வாங்கி கொடுத்த பெற்றவர்களுக்கு தம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தெரியாதா? கோவை சம்பவத்தில் யாருக்கும் தெரியாமல் இருட்டில் நடந்தது ஊருக்கே தெரியும் படி ஆகிவிட்டது நகை நிலம் மற்றும் வீட்டை விற்று படிக்க அனுப்பிவைத்தால் இப்படி ஒரு கேவலமான நிலை தேவையா? இனி அந்த பையன் கூட அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முன்வருவானா? நாங்கள் நண்பர்கள் ஆகத்தான் பழகினோம் என சொல்வார்கள் ஒரு படத்தில் யோக்யனுக்கு இருட்டில் என்ன வேலை என்று சொன்னது மாதிரி நண்பர்களுக்கு ஒதுக்குபுற இருட்டில் என்ன வேலை? சகோதரிகளே சற்று சிந்தித்துப் பாருங்கள் மரம் வைத்தவர்கள் (பெற்றவர்கள்) தண்ணீர் ஊற்ற மாட்டார்களா? முன்னோர் சொல் முழு நெல்லிக்காய் போன்றது முதலில் கசக்கும்(துவர்க்கும்) முடிவில் இனிக்கும். இதை அறிந்தவர்களுக்கு பொண்ணு அறியாதவர்களுக்கு மண்ணு. பெற்றவனாக இருந்து மனம் கேட்காமல் பதிவிட்டுள்ளேன்.


திகழ்ஓவியன்
நவ 05, 2025 13:28

தவறு மேடம் உங்கள் கணிப்பு தவறு


N S
நவ 05, 2025 13:03

அப்பாவின் சகோதரி அன்று சொன்னார், "தமிழகத்தில் இளம் விதவைகள் பெருகுகின்றன. மது ஒழிக்கப்படும்" என்று. இன்று இந்த சகோதரி சொல்கிறார்கள், " பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவிகிதம் அதிகரிப்பு" என்று. அப்பாவின் வழிகாட்டுதலில் இரண்டுமே விரைவில் கட்டுப்படுத்த படும் என நம்பிக்கை மக்களுக்கு உண்டு.


vbs manian
நவ 05, 2025 11:39

பொள்ளாச்சி விவகாரத்தில் என்னமாய் ருத்ர தாண்டவம் ஆடினார்கள்.


அப்பாவி
நவ 05, 2025 11:13

போய் குஜராத் மகப்பேறு ஆஸ்பத்திரிகளை ஆய்வு செய்யுங்க மேடம்.


Indhuindian
நவ 05, 2025 10:28

நாட்டாமை மறுபடியும் சரியா எண்ணி சொல்லுங்க அம்பது சதவிகிதமா அந்த கணக்கே தப்பு கணக்கா இருக்கே


Ramesh Sargam
நவ 05, 2025 10:06

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தில் ஆண்கள், பெண்கள், அரவாணிகள், வயதான பாட்டிகள், பிறந்த குழந்தைகள் யாருக்குமே பாதுகாப்பு என்பது இல்லை. சொல்லப்போனால் நேர்மையாக பணிபுரியும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என்று யாருக்கும் இன்றைக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. இந்த காரணங்களை மேற்கோள் காட்டி தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி பிறப்பிக்கலாம்.


Senthoora
நவ 05, 2025 12:47

எப்பா குறுக்குவழியில் ஆட்சி மாற்றம் கேட்கிறீங்க, நியாயமா தேர்தலில் நின்று ஆட்சியபிடிக்க தில் இல்லை, பெங்களூரில் இருந்து தமிழ் நாட்ட பற்றி கவலை.


Mario
நவ 05, 2025 09:32

டெல்லியை ஒட்டிய ஃபரிதாபாத்தில், 17 வயது மாணவி ஒருவர் தன்னை பின் தொடர்ந்த நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


vbs manian
நவ 05, 2025 09:18

மெழுகுவத்தி ஏந்தி பயணம் போகும் மகளிர் கூட்டத்தை இப்போது ஏன் காணவில்லை. ஆட்சிக்கு சங்கடம் உண்டாகும் என்பதாலா.


Senthoora
நவ 05, 2025 08:58

போலீசும், அரசும் பாதுகாப்பட்டுக் கொடுக்கணுமா, ஏம்மா உங்கக்காலத்தில் இப்படியா படிக்கும்போது இருந்திங்க, முதலில் இந்த கல்லுரி மாணவிகளை திருத்தப்பாருங்க,


சமீபத்திய செய்தி