உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீருடையில் கதறும் சிஆர்பிஎப்., பெண் காவலர்: அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

சீருடையில் கதறும் சிஆர்பிஎப்., பெண் காவலர்: அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவுகின்றனர் என்று பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.அவரது அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5pvsgg0x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜம்மு-காஷ்மீரில் நமது நாட்டின் எல்லைகளில் நேர்மையாக பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சிஆர்பிஎப் ஜவான், கடந்த ஜூன் மாதம் வேலுார் மாவட்டம் காட்பாடி அருகே தனது வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில், போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் அது குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.https://x.com/annamalai_k/status/1952332140559180180சீருடையில் இருக்கும் ஒருவர், ஆன்லைனில் நீதிக்காக கெஞ்ச வைக்கும் அளவுக்கு எந்த வகையான நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது?இது வெறும் சட்டமீறல் மட்டுமல்ல, திமுக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் நிலையில் நமது தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடுகிறார்கள்.இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.தன் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை யாரோ ஒருவர் வீடு புகுந்து திருடிச்சென்று விட்டதாக, கதறி அழுதபடி சிஆர்பிஎப்., பெண் காவலர் கூறும் அந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. தன் தாயார் மாடு மேய்க்கச்சென்றபோது, இந்த சம்பவம் நடந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கம்பி வேலி போடப்பட்ட ஜம்மு காஷ்மீர் எல்லையில் இருந்து அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Kasimani Baskaran
ஆக 05, 2025 04:08

கருப்பு சிகப்பு கரை வேஷ்டி கட்டியிருந்தால் உடனே நடவடிக்கை எடுத்து இருப்பார்கள்.


Azar Mufeen
ஆக 04, 2025 22:06

இங்கே நாட்டை காக்கும் பெண்மணியின் நகை திருட்டு, அங்கே எம். பியின் நகை திருட்டு விளங்கும் இரு களவாணி கட்சிகளின் ஆட்சி


தமிழ்வேள்
ஆக 04, 2025 21:17

லோக்கல் திமுக உபி ஒவ்வொரு பயலையும் லாடம் கட்டி மரண அடி கொடுத்து வெளுத்து விசாரித்தால் பறிபோன நகைகள் கிராம் கூட குறையாமல் கிடைக்கும். .. உதவாத நிதி பவுடர் யாவாரத்துக்கு இந்த நகைகள் முதலீடாக மாறி இருக்கலாம்..


Svs Yaadum oore
ஆக 04, 2025 20:17

இந்த சிஆர்பிஎப் , CISF மற்றும் ராணுவம் பணியில் உள்ளவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண வழிமுறைகள் ஏற்படுத்தனும் ..இது மிக நீண்ட கால பிரச்சனை ..குடும்பத்தில் இருந்து பிரிந்து எப்போதும் வெளி மாநிலங்களில் பணி என்பதால் சமூக விரோதிகள் கவனித்து இது போல தொல்லைகள் தருகிறார்கள் ...இவர்கள் மேல் அதிகாரிகளும் இது போன்ற பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பதில்லை ...


Svs Yaadum oore
ஆக 04, 2025 20:12

சிஆர்பிஎப்.,மிகவும் கடினமான பணி ...ஊர் ஊராக அலையனும் ..இப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய நகைகளை எவனோ ஒருத்தன் நோகாமல் வீடு புகுந்து ஆட்டைய போட்டுட்டான் ....இந்த பெண் தாயார் மாடு மேய்க்கச்சென்றபோது, இந்த சம்பவம் நடந்து விட்டதாம் .....விடியல் இது பற்றி எல்லாம் கவலைப்படாது ...மேற்கு வங்கத்தில் பங்காளதேஷி என்ன மொழி பேசறான் என்ற ஆராய்ச்சியில் விடியல் ரொம்ப பிஸி ....விடியலுக்கு சமூக நீதி மத சார்பின்மை ரொம்ப முக்கியம் ....


ரிஷி கௌதம்
ஆக 04, 2025 19:43

உண்மையில் இதற்காக தமிழக அரசு மற்றும் காவல் துறை வெட்கப்பட வேண்டும்...


தமிழன்
ஆக 04, 2025 19:32

இதை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது நமக்காக மட்டுமல்லாமல் நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு தரும் இவர் மிகவும் போற்றக்கூடியது, ஆனால் இந்த தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக என்ற ஒரு கொடுங்கோல் ஆட்சி மிகவும் கொடியது இது போன்ற நிகழ்வுகள், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நடைபெறுகின்றது இதற்கு சரியான தீர்வுகளை எடுக்காமல் இவர்கள் செய்யும் ஆட்சி மிகவும் கண்டிக்கக் கூடியது, ரவுடிகள் ராஜ்ஜியம், கஞ்சா மற்றும் குடிப்பழக்கங்கள், திருட்டுக்கள், கொலைகள், கற்பழிப்புகள் மிகவும் ஏராளம், இந்த தமிழ்நாட்டில் வாழ தகுதி இல்லாத ஒரு இடமாக மாறிக் கொண்டிருக்கின்றது, மிகவும் வருந்தக்கூடிய செயல்.


Ramesh Sargam
ஆக 04, 2025 19:25

அப்பெண்மணியின், அப்பெண்வீரரின் கண்ணீர் திமுக அரசை அழிக்கும், கண்ணகி மதுரையை அழித்ததுபோல.


திகழ்ஓவியன்
ஆக 04, 2025 20:24

புல்வாமா 42 ராணுவ வீரர்கள் மனைவி விதவை ஆனார்கள் அவர்களின் கண்ணீர் மோடி அரசை அழிக்கு வில்லையே அப்போ கண்ணகி மதுரையை அழித்ததுபோல.சபதம் என்ன ஆயிற்று


N Sasikumar Yadhav
ஆக 05, 2025 03:34

உங்க கோபாலபுர எஜமானின் ஆட்சிக்கு நன்றாக முட்டு கொடுக்கிறீர்


Krish
ஆக 04, 2025 19:23

கூட்டு களவாணிகள் போல. சட்டமாவது ஒழுங்காவது. திராவிட திருட்டு மாடல்


Dharanidharan C, Kanchipuram
ஆக 04, 2025 19:15

Local may well known about the theif. Pls help for our sister.


புதிய வீடியோ