உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால் நெருக்கடி * அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால் நெருக்கடி * அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

சிவகங்கை:“மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாத காரணத்தால், முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடி தரப்படுகின்றன,” என, சிவகங்கையில் நடந்த, 'மக்களுடன் முதல்வர்' திட்ட விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.அவர் பேசியதாவது:தேர்தலின் போது முதல்வர் ஸ்டாலின் 505 வாக்குறுதியை அளித்தார். 85 சதவீத வாக்குறுதிகள் முதல்வர் ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்டுள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில், 6 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை வைத்து சென்றிருந்தனர். கடன் சுமை ஒருபுறம், மத்தியில் இருக்கும் அரசுடன் இணக்கமாக இல்லாத காரணத்தால், பல நெருக்கடிகளை முதல்வருக்கு, மத்திய அரசு அளிக்கிறது.பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு, மத்திய அரசு அதிக நிதி கொடுத்து விட்டு, தமிழகத்திற்கு நிதி அளிப்பதில் பாரபட்சம் காட்டுகின்றனர். மழை வெள்ளம் பாதித்த சென்னைக்கு 2,500 கோடியும், தென் மாவட்டத்திற்கு 1,500 கோடி ரூபாயும் ஒதுக்கினார்.ஆனால், வெள்ள சேதத்தை பார்வையிட வந்த மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் இந்நிதியை பெற்றுத்தர முயற்சிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி