உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னை விமர்சித்தால் அதே பாணியில் பதிலடி: அ.தி.மு.க., விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்

என்னை விமர்சித்தால் அதே பாணியில் பதிலடி: அ.தி.மு.க., விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்

சென்னை: ''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீதான விமர்சனத்தை திரும்ப பெறப் போவதில்லை. என்னை விமர்சித்தால், அதே பாணியில் பதிலடி கொடுப்பேன்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

அவர் அளித்த பேட்டி:

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை, செப்., 1ல் துவங்குகிறது. பா.ஜ.,வின் முதல் அடிப்படை உறுப்பினராக, பிரதமர் மோடி இணைகிறார். தமிழகத்தில், செப்.,2ல், முதல் உறுப்பினராக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இணைகிறார்.அரசியல் தொடர்பே இல்லாத, 1 லட்சம் இளைஞர்களை கண்டறிந்து, அரசியல் தலைவர்களாக உருவாக்க, செப்டம்பர், அக்டோபரில் கிராமங்களை நோக்கிச் செல்ல உள்ளோம்.பா.ஜ.வில் இணைய, மொபைல் போன் எண் கொடுக்கப்படும். அதில், 'மிஸ்டு கால்' கொடுத்தால் பா.ஜ., நிர்வாகிகள் வீட்டுக்கு வந்து உறுப்பினராக சேர்ப்பார்கள். அதன்பின், உட்கட்சி தேர்தல் நடக்கும்.ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின், ஐப்பான், துபாய், சிங்கப்பூர் நாடுகளுக்கு மேற்கொண்ட பயணம் தோல்வி அடைந்துள்ளது. இப்போது, அமெரிக்கா செல்கிறார். அவர் செல்லவுள்ள சான்பிரான்சிஸ்கோ போன்ற பகுதிகளில், தமிழர்கள் கொடிகட்டி பறக்கின்றனர். அவர்களை பிடித்தாலே முதலீடுகள் வரும். அனைத்தையும் பா.ஜ., கவனித்து வருகிறது.கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டுகளில் தமிழகத்திற்கு, 5,000 கோடி ரூபாயை, மத்திய அரசு கொடுத்துள்ளது. நவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தை ஒப்புக்கொண்ட தமிழக அரசு, மும்மொழிக் கொள்கை இருப்பதாகக் கூறி இப்போது மறுக்கிறது. மூன்றாவது மொழியாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது மொழியை, தமிழக அரசு எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், அரசியல் விளையாட்டுக்காக, பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஏற்க மறுக்கிறது. எனக்கு மூன்று ஆண்டுகள் அரசியல் அனுபவம்தான் என்று, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார். தமிழகத்தில் 40 சதவீத வாக்காளர்கள் இளைஞர்கள். நான் அரசியலுக்கு வரும்முன், 10 ஆண்டுகள் ஐ.பி.எஸ்., அதிகாரியாக, அரசியல் தலைவர்களை எதிர் கொண்டுள்ளேன். இது அனுபவம் இல்லையா; 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பல நாடுகளில் அதிபர்களாக உள்ளனர்.பழனிசாமி மீது நான் வைத்த விமர்சனம் 100 சதவீதம் சரி. முன்னாள் அமைச்சர்கள் என்னை தற்குறி என்று கூறலாம். என் படிப்பை, என் வேலையை கொச்சைப்படுத்தலாம். அதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் கையை, காலைப் பிடித்து அரசியலுக்கு வந்ததாக, 70 வயது பழனிசாமி பேசலாம். அதற்கு, 39 வயது அண்ணாமலை பதிலடி கொடுத்தால் தவறா? ஆபாசமாக பேசியவர்களுக்கு, அதே பாணியில் பதிலடி கொடுத்தால் கோபம் வருகிறது. என்னை விமர்சித்தால், அதே பாணியில் பதிலடி கொடுப்பது என் கடமை.நான் தமிழகத்தை முன்னிலைப்படுத்தி, என் பாணியில் அரசியல் செய்து வருகிறேன்.அ.தி.மு.க.,வில் 70 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் தலைக்கு 'டை' அடித்துக் கொண்டு தங்களை இளைஞர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். நான் நியாயமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எதிர்தரப்பிலும் அந்த நியாயம் இருக்க வேண்டும்.இதுவரை எப்படி சண்டை போட்டேனோ, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை மாணவராகவும் சண்டை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

சண்டை தொடரும்

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில், மூன்று மாத படிப்புக்காக செல்கிறேன். அங்கே இருந்தாலும் எனது இதயம் தமிழகத்தில்தான் இருக்கும்; கண்ணும் இங்குதான் இருக்கும். தொலைபேசி வாயிலாக எப்போதும் போல நிர்வாகிகள், தொண்டர்களுடன் பேசிக் கொண்டுதான் இருப்பேன். இதுவரை எப்படி சண்டை போட்டேனோ, ஆக்ஸ்போர்டு பல்கலையில் மாணவராக இருந்தாலும் சண்டை தொடரும்.- அண்ணாமலைபா.ஜ., மாநில தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Vijay D Ratnam
ஆக 28, 2024 21:36

எடப்பாடி பழனிசாமி அண்ணாமலையை பற்றி சொன்னது சாதாரண விஷயம், அரசியலில் கட்சியில் அடிமட்ட தொண்டனாக இல்லாமல் உழைக்காமல் டைரக்ட்டா தலைவராக அப்பாய்ண்ட் பண்ணப்பட்டவர் என்றார். அதை எடப்பாடி மட்டும் சொல்லவில்லை. இதற்கு முன் பல கட்சிக்காரர்கள் சொல்லி இருக்கிறார்கள். அது உண்மையும் கூட. ஏன் பாஜகவில் இருந்து வெளியேறியவர்கள் பலர் சொன்னார்களே. அப்போதெல்லாம் பொங்காத அண்ணாமலை இப்போ பொங்குறாரு. அதுக்காக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரை தற்போதைய எதிர்க்கட்சி தலைவரை தற்குறி என்றது டூ மச். எடப்பாடிக்கு உடனே பதில் அளிக்க தெரியவில்லை. என்னை தற்குறி என்று சொல்லும் தெருப்பொறுக்கி குறித்தெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என்று அவர் சொல்லி இருந்தார் என்றால் சிறப்பான பதிலடியாக இருந்திருக்கும். தற்குறி vs தெருப்பொறுக்கி என்று டிவியில் டிபேட் ஓடிக்கொண்டு இருந்திருக்கும். அடக்கம் அமரருள் உய்க்கும் - அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் அண்ணாமலை. இங்கே எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், ராமதாஸ், திருமாவளவன், வைகோ, கிருஷ்ணசாமி, இவர்களெல்லாம் தலைவர்கள். மற்றபடி செல்வப்பெருந்தகை, கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன், உங்களையெல்லாம் யாரும் தலைவராக பார்க்கவில்லை. இன்னிக்கு இருப்பீங்க, நாளைக்கு வேறு ஒருத்தன் வந்து அந்த இடத்தில இருப்பார், அவ்ளோதான். ஒங்க ஓனர் கடிக்க சொன்னா போயி கடிக்கணும், கால்ல விழச்சொன்னா போயி விழணும், அவ்ளோதான். என்ன பேச்சு பேசுனீங்க திமுகவை, இன்னிக்கு வந்து கால்ல விழுறீங்கல்ல கருணாநிதி நாணயம் வெளியிடுவது தமிழ்நாட்டுக்கே கிடைத்த பெருமை தமிழர்களூக்கு எல்லாம் கிடைத்த கவுரவம் என்று. ஏன்னா பேச்சு பேசியது அந்த வாயி.


venugopal s
ஆக 28, 2024 21:29

தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் மூடர் கூட்டத்தை தான் சொல்ல வேண்டும்!


S.L.Narasimman
ஆக 28, 2024 20:16

நீங்க அவர்களை விமர்சிப்பதை நிறுத்துங்க! அவர்கள் உங்களை பற்றி பேச மாட்டார்கள்


Sundaram Muthiah
ஆக 28, 2024 17:42

டம்மி peasu . ரீல்ஸ் விடுரான்


rama adhavan
ஆக 28, 2024 19:02

அப்போ கேட்காதே.


Kannan
ஆக 28, 2024 12:48

நன்று திரு அண்ணாமலை சொல்வது


MADHAVAN
ஆக 28, 2024 11:21

இவன் வாங்கிய லஞ்சம், கஞ்சா கமிஷனுக்குத்தான் கர்நாடக ல ருந்து தொரத்திவிட்டானுங்க,


murugan
ஆக 28, 2024 12:49

போடா முட்டா பயலே. உனக்கு என்னடா தெரியும். போயி கர்நாடகாவில் விசாரணை செய்து பார்.


Sathyanarayanan Sathyasekaren
ஆக 28, 2024 19:00

மாதவன், இதை ஊழல் கொள்ளை புகழ் திருட்டு திராவிட கொத்தடிமையான நீ சொல்வது தான் மிக பெரிய ஜோக். உன்னை போன்ற கொத்தடிமைகளுக்கு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பொய் சொல்லத்தான் தெரியும். ஆதாரம் கேட்டால் ஓடி ஒளிந்து கொள்வாய்.


அஸ்வின்
ஆக 28, 2024 11:08

நீ ஒரு அரைவேக்காடு ஊழை இட தான் முடியும் மற்றபடி ஒன்னும் செய்ய முடியாது


murugan
ஆக 28, 2024 12:50

யார் அரைவேக்காடு. உனக்கு தலையில் ஒன்றும் கிடையாது அதனாலதான் அண்ணாமலை சொல்வதை புரியவில்லை.


PR Makudeswaran
ஆக 28, 2024 10:15

அரசியலில் வருடங்கள் குறைவு தான். இரண்டு கழகப் புள்ளிகள் போல் இல்லாமல் கரங்கள் சுத்தமாக இருங்கள். அது தான் naladhu.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை