உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயிர்கள் மூழ்கியது; ஜி.கே.வாசன் கவலை!

பயிர்கள் மூழ்கியது; ஜி.கே.வாசன் கவலை!

சென்னை: 'வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததால் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளது. அவற்றை காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கவலை தெரிவித்தார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நெற்பயிர்கள் நீரில் முழ்கி விவசாயிகளை மிகுந்த கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. தஞ்சையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாய்க்கால்கள் முறையாக தூர்வார்வாரப்படவில்லை. அதனால் மழைநீர் வடியாமல் பயிர்கள் நீரில் முழ்கியுள்ளது என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். ஆயிரக்கனக்கான ஏக்கர் சம்மா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களை காக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் எடுக்க வேண்டும்.தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவற்றிக்கு உரிய நிவாரணம் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
நவ 19, 2024 19:48

நாம கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது? பிரதான் மந்திரிக்கீ காப்பீடு வெச்சிருந்தா நல்லது. ஆனா நெல்லுக்குக் குடுத்தாங்களா தெரியலை


prabhu
நவ 19, 2024 15:31

உங்கள் கூட இருப்பவர்கள் உங்கள் கட்சியா இல்லை வேறு ஆட்களை


Gnanam
நவ 19, 2024 19:25

சார்...நீங்க ஏன் கட்சி நடத்தி வேஸ்ட் பண்ணுறீங்க...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை