உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அலைமோதும் பயணியர் கூட்டம்; நெரிசலில் திணறும் பஸ், ரயில் நிலையம்

அலைமோதும் பயணியர் கூட்டம்; நெரிசலில் திணறும் பஸ், ரயில் நிலையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தீபாவளி பண்டிகை கொண்டாட, சொந்த ஊருக்கு செல்லும் மக்களால், பஸ், ரயில்களில் கூட்டம் 2வது நாளாக நேற்றும் அலைமோதியது. புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், திருச்சி, மதுரை, துாத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தும், பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பஸ்களும், மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.சென்னையில் இருந்து 2வது நாளாக, பயணியர் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு திரண்டு சென்றதால், கிளாம்பாக்கம், கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பஸ் நிலையங்களிலும், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான விரைவு ரயில்கள், சிறப்பு கட்டண ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் ரயில்களின் படிகளில் அமர்த்தபடி பயணித்தனர்.சென்னையில் இருந்து நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்களோடு, 2,125 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இது தவிர, பிற முக்கிய நகரங்களுக்கு இடையே, 1,130 பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் பயணியருக்கான உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ராஜ்
அக் 30, 2024 21:56

சென்னையின் அவலமும் தீபாவளி ஜோக்கும்....... தீபாவளிக்கு ஒரு நாள் தான் விடுமுறை எனக்கு. கிளாம் பாக்கம் வரை தான் வர முடியும் ஆகவே நீங்கள் எல்லோரும் கிலாம் பக்கம் பேருந்து நிலையம் வந்து விட்டால் அங்கேயே தீபாவளி கொண்டாடிவிட்டு நீங்க அப்படியே திரும்பி போங்க நாங்க இப்படியே திரும்பிடறோம்.


A P
அக் 30, 2024 18:44

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், சனாதன தர்மம் காக்க, இது போன்ற இந்து பண்டிகைகளைக் கொண்டாட மக்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளனர் என்பதை, தமிழக அமைச்சு புரிந்து கொண்டு, இந்துக்களை கேலி பேசாமல் அமைதி காத்தால் நல்லது. அப்படியும், இந்து தர்மத்தை இழிவு படுத்திப் பேசுகிறார்கள் என்றால்,வேறு மத மார்க்கங்களைப் பற்றி பேச தைரியம் இல்லாத பேடிகள் .


Pats, Kongunadu, Bharat, Hindustan
அக் 30, 2024 10:52

ஒரே நாளில் 5, 10 லட்சம் பேர் பயணித்தால் எவ்வளவு பேருந்து, ரயில்கள் இருந்தாலும் போதாது. எல்லா தொழில்களும் சென்னையில் துவங்குவதை நிறுத்தி, மற்ற மாவட்டங்களிலும் துவங்க அரசு முனைய வேண்டும்.


சாண்டில்யன்
அக் 30, 2024 07:34

பேருந்துகளில் 69 சதவிகித இட ஒதுக்கீடு காலியா இருக்குன்னு அரசு சொல்லியதே கிளாம்பாக்கம் வரை போக சோம்பல் பட்டுக்கிட்டு பக்கத்திலிருக்கிற எழும்பூர் நிலைய நிலவரத்தை போட்டோ போட்டுட்டீங்களா? வழக்கமா ஓடற ரயில்கள் எல்லாவற்றையுமே "சிறப்பு" ரயில்னு கட்டணத்தை உயர்த்திய அழுகிணி குமார் பண்டிகைக்கு மேலும் சில ரயில்களை விட்டு மக்கள் "சேவை" செய்ய சொல்லலாமே செய்வீங்களா


அப்பாவி
அக் 30, 2024 06:29

பேசாம துபாய், அமெரிக்கா , லண்டன், சிங்கப்பூர்னு போய் கொண்டாடுங்களேன். காசுக்கா குறைச்சல்?


அப்பாவி
அக் 30, 2024 06:27

இருப்பிடமே வைகுண்டம். வேங்கடம் நு இருந்த இடத்தில் கொண்டாடுங்க.


முக்கிய வீடியோ