உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நடிகர் ரஜினி உடல்நிலை குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன். அவர் நலமுடன் உள்ளார்' என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ரஜினி இன்று வீடு திரும்புவார்

நடிகர் ரஜினி ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அவருக்கு சீரற்ற ரத்த ஓட்டம், செரிமானக் கோளாறுகள் உள்ள நிலையில் நேற்று இரவு வயிற்றுப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3hqtuz9w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அடுத்த 24 மணி நேரத்திற்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பார், பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்று அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. பரிசோதனைக்கு பிறகு இன்றே வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,'மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்' என பதிவிட்டுள்ளார்.'ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய, உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்' என கவர்னர் ரவி, நடிகர் சரத்குமார் உள்ளிட்ட திரையுலகினர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். 'நடிகர் ரஜினி உடல்நிலை குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன். அவர் நலமுடன் உள்ளார்' என நிருபர்கள் சந்திப்பில் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

saravan
அக் 01, 2024 17:52

ஏம்பா எழுபது ரெண்டு வயசிலா நூறு மீட்டர் பந்தயமா ஓடி முடியும்.... படம் வெளிவரப்போகுது அதற்கான சுய விளம்பரம் தான் இந்த உடல்நிலை கோளாறு ஒவ்வொரு பட வெளியீட்டிற்கும் பார்த்து இந்த நாடகம் பழகிவிட்டது ரசிகனுக்கு...


angbu ganesh
அக் 01, 2024 17:50

நீயெல்லாம் பேப்பர் படிக்காதே ஸ்கூல் புக் படி இன்னும் அறிவு வளரல, நேத்து முழு நாளும் ஒரு உதவாத நிதி துணை முதலமைச்சர் ஆனதுக்கு செய்தி வந்துச்சு ஏன் அதுக்கு ஆட்சேபனை செய்யறதுதானே


Madras Madra
அக் 01, 2024 16:56

அவரு எப்படி இருந்தா எங்களுக்கு என்னங்க


kulandai kannan
அக் 01, 2024 14:34

விரைவில் குணமடைந்து, உய்யாலாலா பாடுவார்.


Barakat Ali
அக் 01, 2024 14:06

ரஜினிகாந்த் நலமாக உள்ளார் ...... நமக்கு சொல்பவர் ரஜினியின் செகரட்டரி அல்ல ... ரஜினியின் குடும்ப உறுப்பினரும் அல்ல ..... மந்திரியார் மாசு தான் ..... இவரைத்தான் திறமையான அமைச்சர் லிஸ்ட்டுல ஒரு கொத்தடிமை வெச்சு கொண்டாடிச்சு ..... ம்ம்ம்ம் .....


RaajaRaja Cholan
அக் 01, 2024 12:32

அட சிங்கப்பூர் சோம்பு பல கட்சி ஆதரவு கருத்து கந்தசாமி அடுத்தவன் சம்பாதிக்கிறவன பார்த்து வயிறு எரியும் கேவலமும்


Palanisamy Sekar
அக் 01, 2024 13:39

தமிழ் மன்னனின் பெயரை வைத்துக்கொண்டால் மட்டும் போதாது மேன். ஒழுங்கா தமிழில் எழுத கற்றுக்கொள். ஐயோ பாவம் யாரு பெத்த பிள்ளையோ..ரத்தக்கொதிப்பு போல.. கூல் கூல் மேன்


RAMAKRISHNAN NATESAN
அக் 01, 2024 10:06

போட்டோவில் இருவரையும் ஒப்பிட்டு பாருங்க ........ எங்க மன்னருக்கு என்றும் பதினாறு ..... மக்கள் சேவையிலும் அவர் மன்னர்தான் ..... தலைமுறை தலைமுறையாக மக்களுக்கு வாழ்க்கையை அர்ப்பணித்த தெலுங்கு குடும்பம் .....


Ag Jaganath
அக் 01, 2024 10:02

யாருக்கு தேவை


angbu ganesh
அக் 01, 2024 09:50

நீயெல்லாம் பேப்பர் படிக்காதே ஸ்கூல் புக் படி இன்னும் அறிவு வளரல, நேத்து முழு நாளும் ஒரு உதவாத நிதி துணை முதலமைச்சர் ஆனதுக்கு செய்தி வந்துச்சு ஏன் அதுக்கு ஆட்சேபனை செய்யறதுதானே


gopal gopal
அக் 01, 2024 14:55

Good


Pats, Kongunadu, Bharat, Hindustan
அக் 01, 2024 09:44

அக்டோபர் 10 அன்று படம் ரிலீஸ் ஆகிறது. அதுவரை இந்த டுபாக்கூர் செய்தி வந்துகொண்டே இருக்கும். டுமீல் முட்டாள்கள் 500 கோடி இழந்த பின் இமயமலைக்கு பிக்னிக் போயிடுவான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை