உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாடிக்கையாளர் சேவை எண் பிஸி: ஏர் இந்தியா மீது பயணியர் புகார்

வாடிக்கையாளர் சேவை எண் பிஸி: ஏர் இந்தியா மீது பயணியர் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'ஏர் இந்தியா' நிறுவனத்தின் பயணியர் வாடிக்கையாளர் சேவை எண்ணில் தொடர்பு கொண்டால், அழைப்புகளை ஊழியர்கள் ஏற்க மறுக்கின்றனர் என புகார் எழுந்துள்ளது.

தொழில்நுட்ப பிரச்னை

இம்மாதம் 12ம் தேதி, குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.இதில் 241 பேர் இறந்தனர். இது ஏர் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்நிறுவனம் இயக்கும் குறிப்பிட்ட சில வகை விமானங்களில், தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது.இதனால், 85க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ரத்து செய்யப்பட்ட விமானங்களில், பலருக்கு முறையாக பணம் திரும்ப வரவில்லை. வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமான சேவைகளில், 15 சதவீதம் வரை குறைப்பதாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

சரியான பதில்

இதன் காரணமாக, அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணில் பயணியர் தொடர்பு கொண்டு, பயண விபரம் குறித்து அறிந்து கொள்ள முயற்சிக்கின்றனர்.ஆனால், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்கள், சரியாக வேலை செய்வதில்லை. ஊழியர்கள் அழைப்பை ஏற்றாலும், சரியான பதில் தராமல் இழுத்தடிக்கின்றனர் என, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.இப்பிரச்னையில், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தலையீட்டு தீர்வு காண வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

JaiRam
ஜூன் 20, 2025 12:13

ஏர் இந்தியா ஊழியர்களுக்கு இன்னும் மத்திய அரசு ஊழியர்கள் என்ற நினைப்பு மத்திய அரசு நிறுவனமாக இருந்த போது இவர்கள் செய்த அடாவடிக்கு அளவே இல்லை, ஏர் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக இயங்க வேண்டுமானால் வேலைசெய்யமல் ஏமாற்றிக்கொண்டும் வாடிக்கையாளர்களை துச்சமாக நடத்தும் அனைவரையும் உடனே டிஸ்ஸ்மிஸ் செய்ய வேண்டும் இல்லை என்றால் இந்த நிறுவனம் டாடா விற்கு தீராத அவப்பெயரை ஏற்படுத்தி விடும்


அப்பாவி
ஜூன் 20, 2025 06:45

இது என்ன புதுசா? இந்தியாவுல எந்த நிறுவனத்திலும் இதே தான். காசு வாங்குறதுல மட்டும்தான் வாடிக்கையாளர் தேவை


Kasimani Baskaran
ஜூன் 20, 2025 03:50

பட்ஜெட் ஏர்லைன்ஸ் வந்தபின்னர், கொள்ளை லாபம் குறைந்ததால் வாடிக்கையாளர் சேவை மிக மிக மோசமாகிவிட்டது. பல நிறுவனங்கள் எஐ சாட் மூலம் பல அழைப்புக்களை தவிர்த்து வருகிறது...