உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.20 கோடி போதைப் பொருள் சென்னையில் பறிமுதல்!

ரூ.20 கோடி போதைப் பொருள் சென்னையில் பறிமுதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எத்தியோப்பியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தி வந்த கென்யா நாட்டு வாலிபர் கைது கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.20 கோடி மதிப்பிலான போதைபொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு, விமானத்தில், போதைப்பொருளை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் கடத்தி வருவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானத்தில் வந்தவர்களில், சந்தேகத்திற்குரிய நபர்களை நிறுத்தி விசாரித்தனர். கென்யா நாட்டு வாலிபரிடம் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் அவரின் உடைமைகளை பிரித்து பார்த்த போது, போதைப்பொருள், கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து கோகைன் போன்ற தோற்றமுடைய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அது எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, இந்தியாவில் யாருக்காக கொண்டு வரப்பட்டது என்று மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். பிடிபட்ட போதைப்பொருள் மதிப்பு ரூ.20 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட கென்யா நாட்டு வாலிபருக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

veera muthu
செப் 18, 2025 10:48

The only reason is DMk and DMK family..


pmsamy
செப் 18, 2025 08:34

வளர்ந்த நாடுகள் உள்பட வளராத நாடுகள் இந்தியா வையும் சேர்த்து போதை பொருள் வியாபாரம் மற்றும் உபயோகம் நடந்து கொண்டே தான் இருக்கிறது அதை தடுக்க முடியாது. டாஸ்மாக் கடை அரசாங்கத்தோடு இதுதான் ஆனா அரசாங்கம் மக்களை மது அருந்துங்கள் என்று என்னைக்குமே சொன்னது இல்ல அது மக்களுடைய விருப்பம்.


ராமகிருஷ்ணன்
செப் 18, 2025 02:53

உள்ளூர் உற்பத்தி தடை பட்டுள்ளதால், வெளிநாட்டு இறக்குமதி. விடியல் ஆட்களின் வேலை தான். வேற யாரும் இவ்வளவு தைரியமாக செய்ய மாட்டார்கள். 20 கிலோ சிக்கி உள்ளது. 200 கிலோ தப்பி விட்டது.


M Ramachandran
செப் 18, 2025 01:29

போதைய்ய பொருள்கடத்தல், ஆள் கடத்தல் , கற்பழிப்புகள் இதாய் எல்லாம் பற்றி ஸ்டாலின் பேசசுவதில்லை. ஏன் என்றால்தான் கீழ் இருக்கும் காவல் துறையை தன் ஏவல் துறையாக மாற்றி அப்பாவிகளை கைது செய்யவும் , தடயங்களை அழிக்கவும் உபயோகிக்கிறார்.


K.n. Dhasarathan
செப் 17, 2025 21:26

எப்படிங்க தினமும் போதை பொருள்கள், தங்கம் கடத்தப்படுகிறது, சென்னை ஏர் போர்டில் என்ன நடக்கிறது ? பேருக்கு கொஞ்சம் காட்டி விட்டு பின்புறத்தில் மொத்தமாக கடத்தப்படுகிறதா? இங்கிருக்கும் போலீஸ் என்ன செய்கிறது ? நீதி துறை ஏன் மிக மிக கடுமையான நடவடிக்கையில் இறங்கவில்லை ? வெளி நாட்டில் போல தூக்கு விதியுங்கள், குற்றவாளியிடம் ஏன் இந்த மென்மையான போக்கு ? ஜாமீன் ? பரோல் ?


Palanisamy Sekar
செப் 17, 2025 21:10

தேர்தலுக்கு முன்பே சம்பாதித்தால்தான் உண்டு என்கிற வெறியில் களம் இறங்கி விட்டார்கள் போலும். ஜாபிர் சாதிக் இன்னும் வெளியேதான் இருப்பான் போல. ஆட்சி அதிகாரம் போயிடுச்சுன்னா அப்புறமா உபிஸ் உழைக்க வேண்டும்.வேர்வை வருவது அவர்களின் உடல் நலத்திற்கு ஒவ்வாது. அதனால்தான் நிச்சயம் அவர்களின் தொடர்பில்லாமல் இது நடக்காது


தமிழ்வேள்
செப் 17, 2025 20:58

துபாய் 50 கோடி ரூபாய் வீட்டு ஓனருக்கு தொடர்பு உள்ளதா?


Natarajan Ramanathan
செப் 17, 2025 20:11

கண்டிப்பாக பாலிடாயில் கும்பலோடு தொடர்பு இருக்கும்.


samy
செப் 17, 2025 18:11

திராவிட மாடல் ஆட்சியில் போதை பொருளுக்கு தட்டுப்பாடு இல்லை