உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி விளம்பரம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

போலி விளம்பரம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

சென்னை:'நிரந்தர வேலை வாய்ப்பு என, வெளியாகி வரும் விளம்பரத்தை நம்ப வேண்டாம்' என, சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு, தற்போது சைபர் பாதுகாப்பு, 'டிஜிட்டல்' குற்றவியல் ஆய்வு, 'நெட்ஒர்க்' குற்றவியல் ஆய்வு, சைபர் சட்டம் போன்றவற்றில் சிறப்பு பெற்ற நிபுணர்களின் பட்டியலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.இதன் மூலமாக, தேவையான சமயங்களில், சைபர் குற்றவியல் விசாரணைக்கு உதவ நிபுணர்களை அணுக முடிவு செய்துள்ளோம். இது, நிரந்தர வேலை வாய்ப்பு அல்ல. சைபர் குற்றப்பிரிவில் நிரந்தர வேலை வாய்ப்பு என, விளம்பரம் செய்து தகவல் பரப்புவோரிடம் எச்சரிக்கை அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை