உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புயல் எதிரொலி: எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

புயல் எதிரொலி: எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: பெஞ்சல் புயல் எதிரொலியாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது.இதன்படி*கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ், ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து கிளம்பும்*சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு மெயில் எக்ஸ்பிரஸ், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11: 30 மணிக்கு கிளம்பும்*திருவனந்தபுரம் ரயில் கடற்கரையில் இருந்து இரவு 11:55 மணிக்கு கிளம்பும்*கொல்லம் கிளம்ப வேண்டிய ரயில் கடற்கரையில் இருந்து 12:30 மணிக்கும்*மும்பை செல்லும் லோக் மானிய திலக் ரயில் திருவள்ளூரில் இருந்து இரவு 7: 30 மணிக்கும்*பெங்களூரு செல்லும் லால்பார்க் ரயில் மாலை 4:45 மணிக்கு திருவள்ளூரில் இருந்தும் கிளம்பும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.விரைவு ரயில் ரத்துஜோலார்ப்பேட்டை - சென்னை சென்ட்ரல் இடையிலான ஏலகிரி விரைவு ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்ப்பேட்டை செல்லும் ரயில் ரத்தான நிலையில், மறுமார்க்கத்தில் நாளை காலை 5 மணிக்கு வர வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

chennai sivakumar
நவ 30, 2024 18:05

சென்ட்ரல் பதிலாக பீச் பரவாய் இல்லை. ஆனால் திருவள்ளூர் எப்படி?? புற நகர மின்சார இரயில்கள் நிறுத்தப்பட்டு விட்டது. திருவள்ளூர் செல்ல பேருந்துகளும் குறைவு.


karutthu kandhasamy
நவ 30, 2024 17:10

இப்படி திடீர் திடீரென்று இடத்தை மாற்றினால் பயணியர் எப்படி வந்து ரயிலை பிடிக்க முடியும் ? இதை ரயில்வே நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டாமா ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை