பெஞ்சல் புயல் எதிரொலி; 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த காலஅவகாசம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தொடர் கனமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின்கட்டணத்தை செலுத்த கூடுதல் காலஅவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக, சென்னையில் இன்று அதிகனமழையும், நாளை கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தொடர்ந்து, பெய்து வரும் கனமழையினால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்கின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wfh6nkyi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேனாம்பேட்டை, குரோம்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிறப்பு நிவாரண முகாம்களின் மூலம் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் அரசு சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின்கட்டணத்தை செலுத்த கூடுதல் காலஅவகாசம் வழங்குவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மழையினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, இன்று முதல் டிச.,10ம் தேதி வரை அபராதத் தொகை இல்லாமல் மின்கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.