உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெஞ்சல் புயலால் எதிர்பார்த்த மிகப்பெரிய பாதிப்பில்லை: அமைச்சர் ராமச்சந்திரன் விளக்கம்

பெஞ்சல் புயலால் எதிர்பார்த்த மிகப்பெரிய பாதிப்பில்லை: அமைச்சர் ராமச்சந்திரன் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெஞ்சல் புயல் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: புயல் கரையை கடந்து வருகிறது. சென்னையில் காற்றின் வேகமும், மழையின் அளவும் குறைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கிறது. இந்த மாவட்டங்களில் 143 நிவாரண முகாம்களில் 4,904 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 56 சமையல் கூடங்களில் 3.23 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 7 செ.மீ., முதல் 10 செ.மீ., வரை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டம் ஆவணியாபுரத்தில் 27 செ.மீட்டரும், மரக்காணத்தில் 22 செ.மீட்டரும், செங்கல்பட்டு ஆத்தூரில் 25 செ. மீட்டரும் மழை பெய்துள்ளது. சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணத்தை அறிவித்துள்ளார். மொத்தம் 21 சுரங்கப்பாதைகள் சென்னையில் உள்ளது. அதில் 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, நாளை காலையே மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறைகளில் மொத்தம் 2,648 புகார்கள் வந்தன. அதில், 2,624 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு விட்டது. 2,904 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 18 குழுக்கள் மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 18,500 தன்னார்வலர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பிற மாவட்டங்களில் பெய்துள்ள மழையின் விபரம் மற்றும் பாதிப்புகளை காலையில் தெரிவிப்பேன். எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சென்னை வானிலை ஆய்வு மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புயல் கரையை கடக்கும் போது, சரியான தகவலை கொடுத்துள்ளனர், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

T SIVAKUMAR
டிச 01, 2024 08:21

அப்ப மத்திய அரசிடமிருந்து நிவாரணம் வேண்டாம்.


இறைவி
டிச 01, 2024 06:14

1 / 1 அதிக கன மழையோ ஒரு மணி நேரத்தில் 20 செமீக்கும் அதிகமாகவோ சென்னையில் மழை கொட்டி விடவில்லை. நிதானமாகவே பெய்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான சாலைகள், தரைவழி பாலங்கள் எல்லாம் மழை நேரில் முழுகி உள்ளன. அப்படியானால் 4000 கோடி ரூபாயில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டது எல்லாம் பொய்யா கோபால். இதுதான் யாரும் குறையே சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி. காசுக்கும் குவாட்டருக்கும் வெட்கமில்லாமல் ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரையிலும், ஓட்டு சதவிகிதத்தை அதிகரிக்க ஆமாம் சாமி போடும் கட்சிகளை வளைத்து வைத்து இருக்கும் வரையிலும் தீயமுகதான் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வரும். மக்கள் எப்போதும் போல சகதியில் உழலும் ஜீவன்களாக சந்தோஷத்தை அனுபவிப்போம். இதுவரை கட்சி சார்பாக காசு கொடுத்தது போக இப்போது அரசு செலவிலேயே மகளிர் உரிமைதொகை என்ற பெயரில் மாதாந்திர காசு கொடுக்கிறார்கள். மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு வரி, மின்சார உயர்வு மூலம் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நம்மிடம் பிடுங்குகிறார்கள். நாமும் பல்லிளித்து ஓட்டு போடுவோம்.


Kannan rajagopalan
நவ 30, 2024 22:21

இப்படி உண்மையை போட்டு உடைத்தால் நிவாரண நிதி ?


Rpalnivelu
டிச 01, 2024 07:21

இப்ப பாத்திரம் ஏந்தி டெல்லி சலோ அலிபாபாவின் 40 பேரும் பாரளுமன்றத்தில் கூச்சல் குழப்பம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை