உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கக்கடலில் 27ல் உருவாகிறது மோந்தா புயல்; வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் 27ல் உருவாகிறது மோந்தா புயல்; வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : 'வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 27ம் தேதி புயலாக வலுவடையும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fbxn6kzq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில், 15 செ.மீ., மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில், 12 செ.மீ., மழையும், ஊத்து பகுதியில், 11 செ.மீ., மழையும், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில், 10 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், வரும் 27ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று காலை 5:30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடையும். இது தொடர்ந்து நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், 27ம் தேதி, புயலாக வலுவடையும். இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், 28ம் தேதி வரை, இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை கனமழை பெய்யலாம். வரும் 27ம் தேதி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில், கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலுார் மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 28ம் தேதி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதால், வங்கக்கடலில் சூறைக்காற்று வீசும். எனவே, தமிழக கடலோரம், ஆந்திரா, மத்திய மேற்கு பகுதிகளுக்கு, 28ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 'மோந்தா' புயல் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, 27ம் தேதி புயலாக உருவாகும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அப்படி புயல் உருவாகும்பட்சத்தில், அதற்கு, 'மோந்தா' என பெயர் சூட்டப்படும். இந்த பெயரை, தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Field Marshal
அக் 25, 2025 07:08

கார்பொரேஷன் அதிகாரிகளும் அமைச்சர் பெருமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாம்பார் சாதம் தயாரிக்க ஏற்பாடு செய்வார்கள் ..வேற என்ன செய்ய முடியும் ?


Arul. K
அக் 25, 2025 06:28

Invest 94B is currently located in the Bay of Bengal. The tem has a low chance of developing into a tropical cyclone in the next 24 hours. Maximum sustained surface winds are around 45–50 km/h 23–28 knots. Minimum sea-level pressure is estimated to be near 1003 hPa. இன்வெஸ்ட் 94B தற்போது வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பமண்டல சூறாவளியாக உருவாகும் வாய்ப்பு குறைவு. அதிகபட்சமாக நீடித்த மேற்பரப்பு காற்று மணிக்கு 45–50 கிமீ 23–28 முடிச்சுகள் வேகத்தில் வீசும். குறைந்தபட்ச கடல் மட்ட அழுத்தம் 1003 hPa க்கு அருகில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு இந்தியாவின் கடற்கரையிலிருந்து அந்தமான் தீவு சங்கிலி வரை நீண்டுகொண்டிருக்கும் ஒரு பள்ளத்தாக்கில் பதிக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த குறைந்த-நிலை சுழற்சி மையத்தை அகச்சிவப்பு படங்கள் காட்டுகின்றன. குறைந்த-நிலை சுழற்சி மையத்திற்கு அருகில் வெப்பச்சலனம் தொடர்ந்து எரிகிறது, ஆனால் தொடர்ச்சியான கிழக்கு காற்று வெட்டு மூலம் வெட்டப்படுகிறது. மிதமான மேற்கு மற்றும் பூமத்திய ரேகை மேல் மட்ட வெளியேற்றம், குறைந்த 5–15 முடிச்சுகள் காற்று வெட்டு மற்றும் 28–29°C வெப்பமான கடல் மேற்பரப்பு வெப்பநிலையுடன் வளர்ச்சிக்கு சாதகமான சூழலை பகுப்பாய்வு காட்டுகிறது. உலகளாவிய நிர்ணயிக்கும் மற்றும் குழும மாதிரிகள் பொதுவாக வடமேற்கு நோக்கி கண்காணிப்பதற்கு முன்பு அடுத்த 1 முதல் 2 நாட்களில் 94B ஒருங்கிணைப்பதைக் காட்டுகின்றன. கூட்டு புயல் எச்சரிக்கை மையம் JTWC வழங்கிய தகவல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை