உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெஞ்சல் புயல், வெள்ளம் பாதிப்பு; ஆய்வை துவக்கியது மத்தியக்குழு!

பெஞ்சல் புயல், வெள்ளம் பாதிப்பு; ஆய்வை துவக்கியது மத்தியக்குழு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: விழுப்புரத்தில் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக்குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்களிடம், மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்து இருப்பதை தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.புயல் மழை வெள்ளம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதி அளித்து இருந்தார். அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் பெஞ்சல் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்துறை அமைச்சக இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இக்குழுவினர் சென்னை வந்தனர். இந்நிலையில், இன்று (டிச.,07) விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர். மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்தது குறித்து மத்திய குழுவிடம் வருவாய்த்துறை செயலாளர் அமுதா, மாவட்ட கலெக்டர் பழனி விளக்கினர். மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து சேத விபரங்களை மதிப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்த பிறகு, மத்திய அரசு நிதி வழங்கும். இது தவிர, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து புயல் நிவாரணப்பணிகளுக்காக, 944 கோடி ரூபாயை ஏற்கனவே மத்திய அரசு தமிழகத்துக்கு விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAJ
டிச 07, 2024 20:40

Get the list of affected people And their account numbers a d directly tranfer the funds to their accounts. Otherwise Central > State 100 % > ministry 50% > district 20%> CROCODILES 10% > officers 5% >victims 2% after local officers belly fat


என்றும் இந்தியன்
டிச 07, 2024 19:26

எல்லாப்பத்திரிகையிலும் திமுக சொல்லி வந்தது என்ன திருட்டு திராவிட அறிவிலி அரசு தினமும் மீடியாவில் என்ன உளறுகின்றது. மழை பெய்து வெள்ளம் வந்தாலும் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு தகுந்த நடவடிக்கை உடனுக்குடன் எடுத்து சரி செய்து விட்டது???அப்படின்னா சேதமில்லை என்று தானே அர்த்தம் ஆகவே ரூ 2000 கோடி கேட்பது எப்படி சரியாகும்???? ஆகவே தான் போனால் போகிறது என்று ரூ 944 கோடி கொடுக்கின்றது மத்திய அரசு


sankar
டிச 07, 2024 18:17

எல்லாம் முடிஞ்சபிறகு -அம்பது ரூபாய் முப்பது காசு தமிழகத்துக்கு தரப்படும்


Bhaskaran
டிச 07, 2024 17:06

ஆய்வு செய்யும்போது அதிகாரிகள் இல்லாமல் மக்களை நேரடியாக விசாரியுங்கள்


Perumal Pillai
டிச 07, 2024 13:41

எந்த பாதிப்பும் இல்லை என்கிறான். பிறகு 2000 கோடி கேட்கிறான் .


RAJ
டிச 07, 2024 11:47

ஏன் டீவில பாக்கலியா .. போதும்... இந்த பழைய பஞ்சாங்கம்.. technologies and data avilable to estimate in few minutes..


Ramesh Sargam
டிச 07, 2024 13:42

சரியாக கூறினீர்கள்.