உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிட்வா புயல் வேகம் குறைந்தது; சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலெர்ட்

டிட்வா புயல் வேகம் குறைந்தது; சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலெர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருவள்ளூர், சென்னைக்கு இன்று (டிச.,01) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா புயல்) கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் வடக்கு திசையில் நகர்கிறது. முன்னாக மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது வேகம் குறைந்துள்ளது.சென்னைக்கு 50 கி.மீ தூரத்திலேயே நீடிக்கிறது. திருவள்ளூர், சென்னைக்கு இன்று (டிச.,01) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி