உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யோகா படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்

யோகா படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்

சென்னை:இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க, வரும் 8ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், அரசு கல்லுாரிகளில் 160 இடங்களும், 17 தனியார் கல்லுாரிகளில் 1,760 இடங்களும் உள்ளன. இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, www.tnhealth.tn.gov.in, www.tnayushselection.org என்ற இணையதளங்களில் விண்ணப்பிப்பது நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை, 3,750 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். மாணவர் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கும் அவகாசம், வரும் 8ம் தேதி மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி