உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி: மாதம் ரூ.73.42 கோடி தேவை

ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி: மாதம் ரூ.73.42 கோடி தேவை

சென்னை: 'போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கினால், மாதம்தோறும் 73.42 கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும்' என, தமிழக போக்குவரத்து துறை கணக்கீடு செய்துள்ளது.அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்களுக்கு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இந்த தொகையை வழங்கக் கோரி, ஓய்வூதியர்களின் சங்கங்கள், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. தற்போதுள்ள ஊழியர்களும், ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை ஆதரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய, அகவிலைப்படி உயர்வு எவ்வளவு; மாதந்தோறும் வழங்கினால், எவ்வளவு கூடுதல் செலவாகும் என, போக்குவரத்து துறை கணக்கீடு செய்துள்ளது. இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு, கடந்த 2015 நவம்பர் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை. நீதிமன்றத்தில் உள்ள பல்வேறு வழக்குகளில், அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அகவிலைப்படி உயர்வு வழங்க, எவ்வளவு தொகை தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது.அதன்படி, நடப்பாண்டு அக்., மாதம் வரையிலான காலத்தில், அகவிலைப்படி உயர்வு வழங்க, 3,028.75 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. மேலும், மாதம்தோறும் அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டுமானால், கூடுதலாக மாதம்தோறும் 73.42 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதை வழங்குவது குறித்து தமிழக அரசு முடிவு செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

raman
டிச 20, 2024 07:50

ஓய்வூதியத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பேருந்துகளின் குழுமம் நிதி ஓதிக்கி இருக்கவேண்டும். அவ்வாறு செய்யாத கம்பெனிகளின் நிர்வாக இயக்குனர் மற்றும் அரசு போக்குவரத்து செயலர் போக்குவரத்து அமைச்சர் மீது குழும விதிகளின் படி நடவடிக்கை எடுக்கவேண்டும்


sundarsvpr
டிச 19, 2024 12:10

அகவிலைப்படி வழக்கின் நோக்கம் விலைவாசி உயர்வை சரிசெய்திட. விலைவாசி உயர்விற்கு யார் காரணம். முதலில் மக்கள். தேவைக்கு மேல் பொருட்களை வாங்குதல் அரசின் தேவையற்ற இலவசங்கள் வழங்குதல். இதற்கு பொருட்கள் கொள்முதலில் நடக்கும் ஊழல்கள். கூட்டு குடும்பங்கள் குறைந்து தனிகுடித்தனங்கள் பெருகியதால் தேவைகள் அதிகப்படுகின்றன.


Arumugam Kannan
டிச 19, 2024 08:24

கண்டிப்பா கொடுக்கப்பட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை