உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் குறைவு: டி.ஜி.பி., தகவல்

சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் குறைவு: டி.ஜி.பி., தகவல்

சென்னை:கடந்த 2024 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில், சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 9.11 சதவீதம் குறைந்துள்ளதாக காவல் துறை அறிவித்து உள்ளது. இதுகுறித்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றிய வழக்கு பதிவுகளை, கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 8.78 சதவீத வழக்குகள் குறைந்துள்ளன. அதேபோல, உயிரிழந்தோரின் எண்ணிக்கையும், 9.11 சதவீதம் குறைந்துள்ளது. விபத்துகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, 1,027 உயிர்கள் காப்பற்றப்பட்டு உள்ளன; 948 சாலை விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளன. மேலும், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களால், விபத்தில் சிக்கிய 14,354 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 6,084 பேர், உயிர் காக்கும் நேரமான, 'கோல்டன் ஹவர்சில்' மருத்துவ சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

உயிரிழப்பு குறைந்தது

ஆண்டுகள் சாலை விபத்து உயிரிழப்பு வழக்குகள் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2024 ஜன., - ஜூலை வரை 10,792 11,268 2025 ஜன., - ஜூலை வரை 9,844 10,241 *சதவீத குறைவு 8.78 9.11இந்த ஆண்டு விதிமீறல்கள் மீதான வழக்குகள்:விதிமீறல்கள் வழக்கு எண்ணிக்கை ஜன., - ஜூலை வரை அதிவேகம் 1,44,702 சிக்னல் மீறல் 1,50,970 வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துதல் 2,40,285 குடிபோதை 1,41,883 அதிக பாரம் 4,550 சரக்கு வாகனத்தில் பயணியரை ஏற்றுதல் 78,876 ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல் 36,39,007, 'சீட் பெல்ட்' அணியாதது 3,20,208


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K Jayaraman
ஆக 20, 2025 04:58

Traffic அதிகமாக உள்ள இடங்களில் சாலையை பொதுமக்கள் கடப்பதற்கு வசதியாக, சிக்னல்களும், சிறிய மேம்பாலங்களும் அமைக்கப்பட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை