உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிசம்பர் 6 விஜய் - திருமாவளவன் சந்திப்பு

டிசம்பர் 6 விஜய் - திருமாவளவன் சந்திப்பு

வரும் டிசம்பர் 6ம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் பிரமாண்ட விழாவில், அம்பேத்கர் பற்றிய புத்தகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெற்றுக் கொள்கிறார்.புத்தகத்தின் ஆசிரியர், 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற கோஷத்தை உருவாக்கி, சில நாட்களுக்கு முன் பரபரப்பை கிளப்பிய வி.சி., துணை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா. https://www.youtube.com/embed/4eIml7NggZMஆதவ் எழுப்பிய திடீர் கோஷம் தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்தியது. ஆனால், அவரது பேச்சால் யாருக்கும் அதிருப்தி இல்லை; தி.மு.க., கூட்டணி உறுதியாக இருக்கிறது என்று சொல்லி சமாளித்தார் திருமாவளவன். ஆதவ் மீது நடவடிக்கையை எதிர்பார்த்த தி.மு.க.,வுக்கு ஏமாற்றத்தை அளித்தார்.

பின்னணி

இந்த பின்னணியில் தான், தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டை விக்கிரவாண்டியில் விஜய் நடத்தினார். அதில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்ததை நாடே வியப்புடன் பார்த்தது. மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய விஜய், வி.சி.,க்கள் மனம் குளிரும் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். த.வெ.க.,வோடு இணைந்து தேர்தல் களத்தை சந்திக்கும் கட்சிகளுக்கு, ஆட்சி அதிகாரத்தில் உரிமையும் பங்கும் உண்டு என்பதுதான் அந்த அறிவிப்பு. இதை இவ்வளவு அழுத்தம் திருத்தமாக விஜய் சொன்னபின், அதன் பின்னணியில் ஆதவ் இருக்கலாமோ என்ற சந்தேகம் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக உளவுத்துறையின் கவனம் விஜய், திருமா, ஆதவ் மீது திரும்பியது. தகவல் சேகரித்து தர, தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு கிடைத்த முதல் தகவலே முக்கியமான தகவலாக அமைந்தது. அடுத்த மாதம் 6ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் அம்பேத்கர் பற்றிய நுால் வெளியீட்டு விழாவில், திருமாவளவனும் விஜய்யும் ஒரே மேடையில் பேச உள்ளனர் என்ற தகவல், ஆளும் வட்டாரத்தை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.உளவுத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கடந்த 2019 லோக்சபா தேர்தல் மற்றும் 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க.,வுக்காக அனைத்து உத்திகளையும் வகுத்துக் கொடுத்த, ஓ.எம்.ஜி., என்ற 'ஒன் மேன் குரூப்'பில் முக்கிய பங்காற்றியவர் ஆதவ். 2021 சட்டசபை தேர்தலுக்கு வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு அ.தி.மு.க., அழைப்பு விடுத்து அட்வான்ஸ் கொடுத்த விஷயம், ஆதவுக்கு தெரிந்தது. உடனே டில்லி சென்று கிஷோரிடம் பேசினார்.

சந்தேகம்

கிஷோரை சரிக்கட்டி தி.மு.க., பக்கம் திருப்பி, வியூக அமைப்பாளராக நியமித்ததில், ஆதவ் பங்கு முதன்மையானது. கிஷோரின் ஆலோசனையின்படி, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலரையும் ஆதவ் தன் வீட்டுக்கு வரவழைத்து பேசினார். அந்த தலைவர்களுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார். ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், அவருக்கும் தி.மு.க., தலைமைக்குமான உறவில் விரிசல் உண்டானது. கட்சியின் இமேஜ் குறித்த அவரது ஆலோசனைகளை, குறுக்கீடுகளாக கருதினர். இதையடுத்து, ஆதவ் ஏமாற்றத்துடன் வெளியேறினார். திருமாவிடம் பேசி, அவருடைய கட்சியில் இணைந்தார். துணை பொதுச்செயலர் பொறுப்பும் கிடைத்தது.

கசப்பு

லோக்சபா தேர்தலில், ஆதவ் போட்டியிட வசதியாக, கள்ளக்குறிச்சி பொது தொகுதியையும் சேர்த்து கேட்டார் திருமாவளவன். விஷயம் தெரிந்து கொண்ட தி.மு.க., அத்தொகுதியை தர மறுத்து விட்டது. இந்த கசப்புகள் எல்லாம் சேர்ந்துதான், திருமா முன்னிலையில் ஆட்சியில் பங்கு கோஷத்தை எழுப்ப வைத்துள்ளது. தேர்தல் உத்தியின் அடுத்தகட்டமாக, விஜயை முன்னிறுத்தி தி.மு.க.,வுக்கு எதிரான காய் நகர்த்தல்களில் இறங்கியுள்ளார். அதன் அடையாளமாக தனது நுால் வெளியீட்டு விழாவை திட்டமிட்டுள்ளார். விஜய், திருமா சந்திப்புக்காகவே இந்த நுாலை அவர் எழுதியிருக்கலாம் என்று தெரிகிறது. இரு தரப்பின் சம்மதம் பெற்று, இருவரையும் தொலைபேசியில் பேச வைத்துள்ளார். 6ம் தேதி விழாவுக்குப்பின், தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்.

யார் இந்த ஆதவ்?

திருச்சியை சேர்ந்த ஆதவ், ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்தவர். கூடைப்பந்து வீரராக இருந்தார். தமிழக விளையாட்டு விடுதியில் தங்கி படித்த இவர், லாட்டரி அதிபர் மார்ட்டின் மகள் டெய்சியை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின், மார்ட்டினின் தொழில்களை கவனித்தார்.முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் துவக்கிய, 'ஓ.எம்.ஜி' அமைப்பில் இணைந்து பணியாற்றினார். 2021 சட்டசபை தேர்தல் வெற்றிக்குப் பின், அங்கிருந்து வெளியே வந்த ஆதவ் அர்ஜுனா, அரைஸ் என்ற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தைத் துவங்கினார். பின், 'வாய்ஸ் ஆப் காமன்' என்ற பெயரில், ஒரு சர்வே அமைப்பை உருவாக்கினார். இந்நிலையில், தன்னுடைய நிதி நிறுவன பொறுப்பில் இருந்து முழுமையாக தன்னை விடுவித்துக் கொண்ட ஆதவ் அர்ஜுனா, நிறுவனத்தை முழுமையாக ஏற்று நடத்தும் பொறுப்பை, தன்னுடைய மனைவி டெய்சியிடம் விட்டார். தி.மு.க., தரப்புக்காக பணியாற்றிய காலத்திலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன் நெருக்கமாக இருந்த ஆதவ், அவருடைய ஆலோசனையின் படி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலரானார். சிறு சிறு தொழில்களில் இருந்தும் தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்ட ஆதவ் அர்ஜுனா, தற்போது முழு நேர அரசியல்வாதியாகி உள்ளார். வி.சி.,க்களுக்கான மாநாடுகளை ஏற்பாடு செய்து கொடுத்து, அக்கட்சிக்கான தேர்தல் வியூகத்தையும் வகுத்துக் கொடுத்தார். 2024 லோக்சபா தேர்தலில், வி.சி.,க்கள் சார்பில் சிதம்பரத்திலும், விழுப்புரத்திலும் போட்டியிட்ட தலைவர் திருமாவளவன் மற்றும் பொதுச்செயலர் ரவிக்குமார் ஆகியோரின் வெற்றிக்காக, இரு தொகுதிகளிலும் மாறி மாறி பணியாற்றினார். இது கட்சியினர் மற்றும் தலைமையை வெகுவாக ஈர்த்தது. தற்போது, தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத் தலைவராகவும், தமிழக ஒலிம்பிக் சங்க பொதுச்செயலராகவும் உள்ளார். கடந்த ஆண்டு இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவரானார். -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

Ganesun Iyer
நவ 02, 2024 19:48

₹200க்கு இவ்வளவு பெரிய கருத்தா?


வைகுண்டேஸ்வரன்
நவ 02, 2024 19:09

பாபர் மசூதி இடித்த நாளில் சந்திப்பு. ஏதாச்சும் உள்நோக்கம் இருக்குமோ?


Rengaraj
நவ 02, 2024 16:15

சமீபத்தில் வெளியான தேர்தல் கமிஷன் அறிக்கைபடி தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் 6.27 கோடி. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தோராயமாக 2.50 லட்சம் வாக்காளர்கள். மக்கள் வாக்குப்பதிவு அதிகபட்சம் 75% . பதிவாகலாம். தோராயமாக ஒரு தொகுதிக்கு 1.80 லட்சம் வாக்குகள் பதிவாகலாம். .. ஒரு தொகுதிக்கு தோராயமாக 180 வாக்குச்சாவடிகள் . தி.மு.க , அண்ணா தி.மு.க , பாஜக, நாம் தமிழர், த.வெ .க என்று ஐந்து முனைப்போட்டி உறுதியாகிவிட்டது. போட்டியிடும் அனைத்து கூட்டணி கட்சிகளும் ஓட்டுக்களை பிரிக்கவேண்டும். எனவே தோராயமாக 30 சதவீதம் பெறும் கூட்டணி அதாவது 50000 முதல் 55000 வரை வாக்குகள் பெரும் கூட்டணி வெற்றிபெறும். ஒவ்வொரு கூட்டணிக்கும் தொகுதிக்கு 36000 வாக்குகள் கிடைக்கும். . ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 250 முதல் 300 வாக்குகள் பெற வேண்டும். . யார் 50000 வாக்குகளை பெறுகிறாரோ அதாவது யார் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தது 250 முதல் 275 வாக்குகளை பெறுகிறாரோ அவர் அந்த தொகுதி எம்.எல்.ஏ . இதில் குழப்பம் ஏதும் இல்லை. எனவே அந்த 50000 வாக்குகளை ஒவ்வொரு தொகுதியிலும் பெற வேண்டும் என்றுதான் கட்சிகள் பார்க்கவேண்டுமே தவிர இப்படி அறிக்கையிலும், மேடையிலும், சமூகஊடகங்களிலும் சண்டைபோட்டுக்கொண்டிருப்பது தேவையற்றது. இப்போதே வேலையை தொடங்கி வார்டு வார்டாக அலைந்து திரிந்து வேலையை பார்க்கவேண்டும். அதற்கு பெயர் தான் மைக்ரோ லெவல் மேனேஜ்மென்ட் . 2026 தேர்தலுக்காக க்காக இதை அனைத்து கட்சிகளும் உணரவேண்டும். தமிழகத்தில் தோராயமாக 62000 வாக்குச்சாவடிகள். ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பூத் ஏஜென்ட் தேவை. அப்படி பார்த்தால் 627000 பூத் ஏஜெண்டுகளை விஜய் நியமிக்க வேண்டும். கட்சி மாநாட்டுக்கு வந்தவர்கள் மூன்று லட்சம் பேர் அப்படியே பூத் ஏஜெண்டுகள் என்று எடுத்துக்கொண்டால் மீதம் 327000 ஏஜெண்டுகளை எப்படி விஜய் நியமிப்பார். ? அப்புறம் வட்டம், நகரம், ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், குறுவட்டம் , மாவட்டம், மாநிலம், என்று பல்வேறு நிர்வாகிகளை நியமிக்க வேண்டுமே ? அதற்கு ஒரு ஏற்பாட்டையும் பண்ணவில்லையே ? கட்சி ஆரம்பித்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டது. இதெல்லாம் செய்யாமல் விஜய் கூட்டணிக்கு கட்சிகளை அழைக்கிறார் அதையெல்லாம் யாரும் பேசவில்லையே ?


Oviya Vijay
நவ 02, 2024 13:51

இதுவும் ஒரு சாதாரண நாள். அவ்வளவே. பல கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஒரு விசேஷ நிகழ்ச்சியின் போது அவர்களுக்குள் நட்பு பாராட்டிக் கொள்வதைப் போல இதுவும் கடந்து செல்லக் கூடிய வகையிலான ஒரு நிகழ்ச்சியேயன்றி இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை. திமுக கூட்டணித் தலைவர்கள் சொல்லிக் கொள்வதைப் போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் (எதிர்கட்சிகள்) யாரும் இல்லை. இது நூற்றுக்கு நூறு உண்மை. சொல்லிக்கொள்ளும் படியான வலுவான எதிர்க்கட்சி என்ற ஒன்று தமிழகத்தில் இல்லவே இல்லை. அதற்கு சாட்சி திமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வென்றது. திமுகவுக்கு எதிர் அணியில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால் எப்படியாவது திமுக கூட்டணி உடைந்து விடாதா என்பதைத் தான். அதற்கான வாய்ப்பு என்பது தற்போதைக்கு மிக மிக குறைவு. இதே கூட்டணி தான் அப்படியே அடுத்த சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கும். அதற்கான காரணங்கள் பல உண்டு. ஒன்று காங்கிரஸ் எந்த வலுவான காரணங்கள் இன்றி திமுக கூட்டணியை விட்டு வெளியே வராது. ஆட்சியில் பங்கு என்னும் விஜயின் கருத்தை செல்வப் பெருந்தகை வரவேற்பதாக சொல்கிறாரே தவிர டெல்லி தலைமையின் முடிவை ஏற்காமல் விஜயுடன் கூட்டணி வைக்க போவதாக அறிவிக்கிறார் என்று இதற்கு அர்த்தமில்லை. 1996 மத்திய தலைமையின் முடிவை எதிர்த்து மூப்பனார் வெளியேறியதைப் போன்று திறன் மிக்க தலைவர்கள் தற்போது மாநிலத் தலைமையில் எவரும் இல்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் ஸ்டாலினை சந்திக்கச் செல்லும் முன் ஸ்வீட் பாக்ஸ் வாங்கிக் கொண்டு சென்ற ஒரு சிறு நிகழ்வு மொத்த மீடியாவையும் புரட்டிப் போட்டது என்றே சொல்ல வேண்டும். அதனால் எழுந்த நேர்மறையான விமர்சனங்கள் காங்கிரஸ் திமுக இடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்தியது. பிஜேபி மோடியை வைத்து தமிழகத்தில் எத்தனை ரோடு ஷோ நடத்திக் காட்டியும் ஒன்றும் எடுபடாமல் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்று திமுக கூட்டணி அள்ளியது தமிழகத்தில் திமுக எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பதை இந்த நாடே வியந்து பார்த்தது... ராகுல் பிஜேபியை பார்த்து நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட தமிழகத்தை ஆள முடியாது என நாடாளுமன்றத்தில் முழங்கியது பிஜேபியை மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கி அவர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்றே கூற வேண்டும். அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெளியே வர வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்கள் வெளியேறினால் திமுக கூட்டணியில் பாமக உள்ளே வர வாய்ப்புள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேறி செல்லாக்காசாக யார் விரும்புவார். மதிமுக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மற்றும் பிற உதிரிக் கட்சிகளும் தாங்கள் இருக்கும் இடமே சுகம் என்பது போல இருக்குமேயன்றி ஒருபோதும் இந்த கூட்டணியை விட்டு வெளியே வராது. ஆனால் 2026 தேர்தலில் ஒரு அதிசயம் நிகழப் போகிறது. அது என்னவென்றால் விஜயின் தவெக கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும் மிகப்பெரிய ஒட்டு வங்கியை பெறப்போகிறது என்பது உண்மை... எப்படியெனில் சென்ற தேர்தல் வரை தமிழகத்தில் ஏதாவது ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விடாதா என்ற ஏக்கத்தில் இருக்கும் எந்த கட்சியையும் சார்ந்திராத மக்களின் ஓட்டுக்கள், திமுகவில் இருக்கும் விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள், பிஜேபியை சார்ந்த ஆட்டுக்குட்டியின் புகழ் பாடி களைத்துப் போன நடிகர் விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள், தொம்பிகளை மட்டும் நம்பி ஒவ்வொரு முறையும் களமிறங்கும் சீமான் கட்சியைச் சார்ந்த விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள், நங்கூரமின்றி கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் அதிமுகவிலிருக்கும் விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள் என பலதரப்பட்ட ஓட்டுக்கள் வந்து குமியப் போகிறது. ஏனென்றால் ரசிகர்களைப் பொறுத்தவரை இவ்வளவு நாட்கள் இருந்த கட்சி பெரிதா இல்லை தனக்கு பிடித்த சினிமா நட்சத்திரம் புதிதாக ஆரம்பிக்கும் கட்சி பெரிதா என்றால் சினிமா நட்சத்திரத்திற்கு தான் முதலிடம்.... ஏற்கனவே குறிப்பிட்டது போல... மேலே குறிப்பிட்டோரின் ஓட்டுக்கள் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும் தவெக கட்சி சந்திக்கும் முதல் தேர்தலில் பெரும் எழுச்சி பெற்று நடிகர் விஜய் முன்னேறிச் செல்ல இது வழிவகுக்கும். 2011 ல் எப்படி தேமுதிக எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றதோ அதே போல விஜய் கட்சி கூடிய விரைவில் உருவெடுக்கும்... விஜய் கட்சியினால் பெருத்த அடி வாங்கப் போவது மூன்று கட்சிகள்... 1. அதிமுக, 2. பிஜேபி 3. நாதக. அதிமுகவில் பிரிந்து கிடக்கும் யாவரும் ஒன்றிணைந்தால் கூட இனி அதிமுகவிற்கு எதிர்காலம் கிடையாது. உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்பது போல தமிழிசை தாம் வகித்த கெளரவம் மிக்க பதவியையும் மத்திய பிஜேபி கொடுத்த அழுத்தத்தினால் உதறி விட்டு தேர்தலில் போட்டியிட்டு தோற்று நொந்து கிடக்கிறார்... வேற்று மாநிலத்தின் MLA க்களின் உதவியால் மட்டுமே ராஜ்யசபா MP பதவியின் மூலமாக மத்திய அமைச்சர் பதவி பெற்றிருக்கும் L போர்டு முருகன் பற்றி சொல்லவே வேண்டியதில்லை... இரண்டாம் முறையாக தமிழகத்தில் போட்டியிட்டு தொடர் தோல்வி... நண்பர்கள் கொடுக்கும் பணத்தில் வீட்டு வாடகை உட்பட தன் செலவுகளை கவனித்துக் கொள்ளும் ஆட்டுக்குட்டி மீடியாக்கள் முன்பு வாய்ச் சவுடால் பேசுவது ஒன்றே தன் மூலதனமாக வைத்துள்ளது. தமிழக பிஜேபியில் பொன் ராதாகிருஷ்ணனை தவிர ஒரு நல்ல தலைவரை அடையாளம் காண்பது அரிது. அவரையே இந்த தமிழக மக்கள் தோற்கடிக்கிறார்கள்... ஆகவே மாற வேண்டியது கூட்டணி அல்ல... மக்கள் மனநிலை ஒன்றே... உட்கட்சி பூசலில் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 2026 தேர்தல் தனித்து நிற்கும் கடைசித் தேர்தலாக அமையலாம். நடிகர் விஜய் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க விரும்பாத கட்சிகள் மூன்று... திமுக, அதிமுக மற்றும் பிஜேபி... இவைகள் தவிர்த்து ஆட்சி அமைக்கும் வண்ணம் சாதகமான சூழ்நிலை உருவாக தவெகவுக்கு சில காலம் ஆகலாம். அதுவரை அந்த கட்சியின் செயல்பாடுகளை மற்ற கட்சிகள் உற்று நோக்குமே தவிர அதிரடி முடிவெடுக்கும் நிலை தற்போதைக்கு யாருக்கும் இல்லை. 1996 தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தேர்தலுக்கு சில நாட்கள் முன்னர் அதிமுக உடனான கட்சித் தலைமையின் கூட்டணி முடிவை மறுத்து கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்து மிக மிகக் குறுகிய காலத்தில் அதற்கு கிடைத்த சைக்கிள் சின்னத்தை மக்களின் மனதில் இடம்பெறச் செய்து அந்த தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைத்திடச் செய்த மூப்பனார் நிகழ்த்தியது போன்ற ஒரு மாயஜாலம் மீண்டும் நிகழ்ந்தால் ஒழிய வலுவான எதிர்க்கட்சி உருவாவது சந்தேகமே... அதுவரை அனைத்து கட்சிகளும் உதிரிக் கட்சிகளே... அதுவரை எந்த மாற்றமும் இருக்காது இந்த தமிழகத்தில்...


angbu ganesh
நவ 02, 2024 14:44

கூவு PAID போஸ்ட் 2026 வரதுக்குள்ள இவ்ளோ சோம்பு தூக்கற உனக்கு ஏதாச்சும் கிட்டிங அர வேக்காடு தன்மை வேரால் இருக்குதுன்னு எதையோ கண்டதையும் TYPE பண்ண வேண்டியது


சந்திரன்,போத்தனூர்
நவ 02, 2024 15:54

பெரிய ஓவியம்னு நெனப்பு போல இங்க என்ன கட்டுரை போட்டியா நடக்குது அதுவும் இவ்வளவு நீளமான ஒன்னத்துக்கும் உதவாத ஜவ்வு மிட்டாய். இந்த மாதிரி கழுத்தறுப்பு கேஸ்கள் போடும் கருத்தை எல்லாம் போட்டு எங்களை சிரமப் படுத்தாதீர்கள்...


வைகுண்டேஸ்வரன்
நவ 02, 2024 18:30

தரமான சிறந்த அரசியல் அலசல். நடுநிலையாக, குறிப்பாக நாகரிகமான வார்த்தைகளுடன் எழுதியிருப்பது இன்னொரு சிறப்பு. பதிவிட்ட தி. ம. வுக்கு நன்றி.


வைகுண்டேஸ்வரன்
நவ 02, 2024 19:34

தரமான அரசியல் அலசல். சிறப்பு. பாராட்டுக்கள்.


oviya.vijay
நவ 02, 2024 13:51

இதுவும் ஒரு சாதாரண நாள். அவ்வளவே. பல கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஒரு விசேஷ நிகழ்ச்சியின் போது அவர்களுக்குள் நட்பு பாராட்டிக் கொள்வதைப் போல இதுவும் கடந்து செல்லக் கூடிய வகையிலான ஒரு நிகழ்ச்சியேயன்றி இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை. திமுக கூட்டணித் தலைவர்கள் சொல்லிக் கொள்வதைப் போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் எதிர்கட்சிகள் யாரும் இல்லை. இது நூற்றுக்கு நூறு உண்மை. சொல்லிக்கொள்ளும் படியான வலுவான எதிர்க்கட்சி என்ற ஒன்று தமிழகத்தில் இல்லவே இல்லை. அதற்கு சாட்சி திமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வென்றது. திமுகவுக்கு எதிர் அணியில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால் எப்படியாவது திமுக கூட்டணி உடைந்து விடாதா என்பதைத் தான். அதற்கான வாய்ப்பு என்பது தற்போதைக்கு மிக மிக குறைவு. இதே கூட்டணி தான் அப்படியே அடுத்த சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கும். அதற்கான காரணங்கள் பல உண்டு. ஒன்று காங்கிரஸ் எந்த வலுவான காரணங்கள் இன்றி திமுக கூட்டணியை விட்டு வெளியே வராது. ஆட்சியில் பங்கு என்னும் விஜயின் கருத்தை செல்வப் பெருந்தகை வரவேற்பதாக சொல்கிறாரே தவிர டெல்லி தலைமையின் முடிவை ஏற்காமல் விஜயுடன் கூட்டணி வைக்க போவதாக அறிவிக்கிறார் என்று இதற்கு அர்த்தமில்லை. 1996 மத்திய தலைமையின் முடிவை எதிர்த்து மூப்பனார் வெளியேறியதைப் போன்று திறன் மிக்க தலைவர்கள் தற்போது மாநிலத் தலைமையில் எவரும் இல்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் ஸ்டாலினை சந்திக்கச் செல்லும் முன் ஸ்வீட் பாக்ஸ் வாங்கிக் கொண்டு சென்ற ஒரு சிறு நிகழ்வு மொத்த மீடியாவையும் புரட்டிப் போட்டது என்றே சொல்ல வேண்டும். அதனால் எழுந்த நேர்மறையான விமர்சனங்கள் காங்கிரஸ் திமுக இடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்தியது. பிஜேபி மோடியை வைத்து தமிழகத்தில் எத்தனை ரோடு ஷோ நடத்திக் காட்டியும் ஒன்றும் எடுபடாமல் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்று திமுக கூட்டணி அள்ளியது தமிழகத்தில் திமுக எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பதை இந்த நாடே வியந்து பார்த்தது... ராகுல் பிஜேபியை பார்த்து நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட தமிழகத்தை ஆள முடியாது என நாடாளுமன்றத்தில் முழங்கியது பிஜேபியை மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கி அவர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்றே கூற வேண்டும். அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெளியே வர வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்கள் வெளியேறினால் திமுக கூட்டணியில் பாமக உள்ளே வர வாய்ப்புள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேறி செல்லாக்காசாக யார் விரும்புவார். மதிமுக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மற்றும் பிற உதிரிக் கட்சிகளும் தாங்கள் இருக்கும் இடமே சுகம் என்பது போல இருக்குமேயன்றி ஒருபோதும் இந்த கூட்டணியை விட்டு வெளியே வராது. ஆனால் 2026 தேர்தலில் ஒரு அதிசயம் நிகழப் போகிறது. அது என்னவென்றால் விஜயின் தவெக கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும் மிகப்பெரிய ஒட்டு வங்கியை பெறப்போகிறது என்பது உண்மை... எப்படியெனில் சென்ற தேர்தல் வரை தமிழகத்தில் ஏதாவது ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விடாதா என்ற ஏக்கத்தில் இருக்கும் எந்த கட்சியையும் சார்ந்திராத மக்களின் ஓட்டுக்கள், திமுகவில் இருக்கும் விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள், பிஜேபியை சார்ந்த ஆட்டுக்குட்டியின் புகழ் பாடி களைத்துப் போன நடிகர் விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள், தொம்பிகளை மட்டும் நம்பி ஒவ்வொரு முறையும் களமிறங்கும் சீமான் கட்சியைச் சார்ந்த விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள், நங்கூரமின்றி கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் அதிமுகவிலிருக்கும் விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள் என பலதரப்பட்ட ஓட்டுக்கள் வந்து குமியப் போகிறது. ஏனென்றால் ரசிகர்களைப் பொறுத்தவரை இவ்வளவு நாட்கள் இருந்த கட்சி பெரிதா இல்லை தனக்கு பிடித்த சினிமா நட்சத்திரம் புதிதாக ஆரம்பிக்கும் கட்சி பெரிதா என்றால் சினிமா நட்சத்திரத்திற்கு தான் முதலிடம்.... ஏற்கனவே குறிப்பிட்டது போல... மேலே குறிப்பிட்டோரின் ஓட்டுக்கள் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும் தவெக கட்சி சந்திக்கும் முதல் தேர்தலில் பெரும் எழுச்சி பெற்று நடிகர் விஜய் முன்னேறிச் செல்ல இது வழிவகுக்கும். 2011 ல் எப்படி தேமுதிக எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றதோ அதே போல விஜய் கட்சி கூடிய விரைவில் உருவெடுக்கும்... விஜய் கட்சியினால் பெருத்த அடி வாங்கப் போவது மூன்று கட்சிகள்... 1. அதிமுக, 2. பிஜேபி 3. நாதக. அதிமுகவில் பிரிந்து கிடக்கும் யாவரும் ஒன்றிணைந்தால் கூட இனி அதிமுகவிற்கு எதிர்காலம் கிடையாது. உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்பது போல தமிழிசை தாம் வகித்த கெளரவம் மிக்க பதவியையும் மத்திய பிஜேபி கொடுத்த அழுத்தத்தினால் உதறி விட்டு தேர்தலில் போட்டியிட்டு தோற்று நொந்து கிடக்கிறார்... வேற்று மாநிலத்தின் MLA க்களின் உதவியால் மட்டுமே ராஜ்யசபா MP பதவியின் மூலமாக மத்திய அமைச்சர் பதவி பெற்றிருக்கும் L போர்டு முருகன் பற்றி சொல்லவே வேண்டியதில்லை... இரண்டாம் முறையாக தமிழகத்தில் போட்டியிட்டு தொடர் தோல்வி... நண்பர்கள் கொடுக்கும் பணத்தில் வீட்டு வாடகை உட்பட தன் செலவுகளை கவனித்துக் கொள்ளும் ஆட்டுக்குட்டி மீடியாக்கள் முன்பு வாய்ச் சவுடால் பேசுவது ஒன்றே தன் மூலதனமாக வைத்துள்ளது. தமிழக பிஜேபியில் பொன் ராதாகிருஷ்ணனை தவிர ஒரு நல்ல தலைவரை அடையாளம் காண்பது அரிது. அவரையே இந்த தமிழக மக்கள் தோற்கடிக்கிறார்கள்... ஆகவே மாற வேண்டியது கூட்டணி அல்ல... மக்கள் மனநிலை ஒன்றே... உட்கட்சி பூசலில் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 2026 தேர்தல் தனித்து நிற்கும் கடைசித் தேர்தலாக அமையலாம். நடிகர் விஜய் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க விரும்பாத கட்சிகள் மூன்று... திமுக, அதிமுக மற்றும் பிஜேபி... இவைகள் தவிர்த்து ஆட்சி அமைக்கும் வண்ணம் சாதகமான சூழ்நிலை உருவாக தவெகவுக்கு சில காலம் ஆகலாம். அதுவரை அந்த கட்சியின் செயல்பாடுகளை மற்ற கட்சிகள் உற்று நோக்குமே தவிர அதிரடி முடிவெடுக்கும் நிலை தற்போதைக்கு யாருக்கும் இல்லை. 1996 தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தேர்தலுக்கு சில நாட்கள் முன்னர் அதிமுக உடனான கட்சித் தலைமையின் கூட்டணி முடிவை மறுத்து கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்து மிக மிகக் குறுகிய காலத்தில் அதற்கு கிடைத்த சைக்கிள் சின்னத்தை மக்களின் மனதில் இடம்பெறச் செய்து அந்த தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைத்திடச் செய்த மூப்பனார் நிகழ்த்தியது போன்ற ஒரு மாயஜாலம் மீண்டும் நிகழ்ந்தால் ஒழிய வலுவான எதிர்க்கட்சி உருவாவது சந்தேகமே... அதுவரை அனைத்து கட்சிகளும் உதிரிக் கட்சிகளே... அதுவரை எந்த மாற்றமும் இருக்காது இந்த தமிழகத்தில்...


தம்புராஜ்,இரட்சண்யபுரம்
நவ 02, 2024 15:57

ஏய் அணில் குஞ்சு நீ போக மாட்டியா சும்மா தொன தொனன்னுகிட்டு...


krishna
நவ 02, 2024 13:31

AAMAM KOOTHADI AVARGALUM GOPALAPURAM KOTHADIMAI AVARGALUM SANDHITHU UKRAINE RUSSIA MATTRUM ISRAEL IRAN SANDAYAI UDANE NIRUTHA POGIRAARGAL. ILLAI ENDRAAL KOOTHADI ANDHA 4 NAADUGALAYUM ADICHU THUDAITHU ERINDHU VIDUVAAR.


sankaranarayanan
நவ 02, 2024 13:29

ஆதவ் அல்லது ஆதவன் என்றாலே சூரியன் என்றுதானே அர்த்தம் பிறகு உதய சூரியனுக்கு எங்கே வாய்ப்பு உதிப்பது சிறுது காலம்தான் அதிக நேரம் இல்லை ஆனால் உதித்த ஆதவன் உதயம் ஆனபின் சூரியன் நாள் முழுவதும் வானில் உள்ளான் வெளிச்சம் தருகிறான் ஆதலால் இனி அவனை நம்பித்தான் ஆதவனை நம்பித்தான் தமிழ்நாட்டில் அரசியலே இருக்கும் அந்தி சூரியனுக்கு நின்னொரு கட்சி பிறகு வரும் அது அஸ்தமித்துவிடும்


வைகுண்டேஸ்வரன்
நவ 02, 2024 19:06

1982 முதல், 44 ஆண்டுகளாக இருக்கும் வி சி க வில், ஜஸ்ட் 3 ஆண்டுகளுக்கு முன்னால் சேர்ந்தவன் தான் ஆதவ் அர்ஜுன். இவனுக்கு வி சி க வில் ஏன் கட்சிப் பதவி? திருமா வுக்கு பாஜக வின் பொட்டியும் ஆணை யும் தான் காரணம். திருமா வின் அஸ்தமனம் ஆரம்பம். கூடவே சீமானுக்கும் அஸ்தமனம் தான். திமுக அதிமுக மட்டும் தான் தமிழ் நாட்டின் கட்சிகள்


Sivagiri
நவ 02, 2024 12:49

ஆக , ஆக , மோடியின் சாபம் நிறைவேறிடும் போல இருக்கு - எலெக்சன் முடிந்தவுடன் திமுக அழியும்னு சொன்னார் ? . .


ஆரூர் ரங்
நவ 02, 2024 12:48

டிசம்பர் 6. பாபரின் வாரிசுகளுக்கு பாடம் புகட்டப்பட்ட நாளிலா?


Bala
நவ 02, 2024 12:36

உண்மைதான். திரு அண்ணாமலை அவர்கள் வந்தவுடன் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர்களின் குறைகளையும் அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளையும் கேட்டு தெரிந்துகொண்டு அவைகளை களைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளார். 2026 தேர்தல் தமிழகத்தில் அண்ணாமலை தலைமையிலான அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையப்போவது உறுதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை