உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில்களுக்கு வன நிலங்கள் ஒருங்கிணைப்பு குழுவில் முடிவு

கோவில்களுக்கு வன நிலங்கள் ஒருங்கிணைப்பு குழுவில் முடிவு

சென்னை:மதுரை, ஈரோடு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதிகள் செய்ய, வன நிலங்களை ஒப்படைக்க, வனத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.வனப்பகுதிகளில் அமைந்துள்ள கோவில்களில், அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதில், பல்வேறு நடைமுறை பிரச்னைகள் உள்ளன.இது குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்க, வனத்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுஉள்ளது. இக்குழுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், சேகர்பாபு தலைமையில் நடந்தது. இரு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மதுரை, திருவள்ளூர், ஈரோடு, கோவை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில், பிரபலமான கோவில்கள் உள்ளன. இக்கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு, தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு சில இடங்களில், வனத்துறை ஒப்புதல் தேவை, சில இடங்களில் வனத்துறை நிலம் தேவைப்படுகிறது. இதற்கு வனத்துறை ஒப்புதல் பெறுவது குறித்து, கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், வன நிலங்களை ஒப்படைக்க, வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க, முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி