உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை இரண்டு கட்டமாக செயல்படுத்த முடிவு: அமைச்சர் துரைமுருகன்

நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை இரண்டு கட்டமாக செயல்படுத்த முடிவு: அமைச்சர் துரைமுருகன்

சென்னை:''நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை, இரண்டு கட்டமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

கொ.ம.தே.க., - ஈஸ்வரன்: கழிவு நீரால் மாசுபட்டுள்ள, காவிரி மற்றும் துணை ஆறுகளை சுத்தப்படுத்த, 'நடந்தாய் வாழி காவிரி' திட்டம் தீட்டப்பட்டது. இதற்கு, 934 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. மத்திய அரசு பங்கு, 60 சதவீதம்.மாநில அரசின் பங்கு, 40 சதவீதம் என, முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், மத்திய அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு, 'மாநில அரசு முன்னெடுப்பு இல்லை' என, எழுத்துப்பூர்வமாக பதில் வந்துள்ளது. மாநில அரசின் நிலை என்ன?அமைச்சர் துரைமுருகன்: காவிரி மற்றும் திருமணிமுத்தாறு, கரபங்கா, பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய ஐந்து நதிகளை மாசுபடுவதில் இருந்து பாதுகாத்தல், புத்துயிர் பெறச் செய்தல், நீர் ஆதாரங்களை மேம்படுத்துதல் ஆகியவை, 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தின் நோக்கம்.இத்திட்டத்தை இரண்டு கட்டமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டம், காவிரியில் மேட்டூரில் இருந்து திருச்சி வரை மற்றும் ஐந்து கிளை ஆறுகள்; இரண்டாவது கட்டம், திருச்சி முதல் கடல் முகத்துவாரம் வரை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது.முதற்கட்ட திட்ட மதிப்பீடு 934.30 கோடி ரூபாய். மத்திய அரசின் பங்கு 560.58 கோடி; மாநில அரசின் பங்கு 371.72 கோடி ரூபாய். விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடக்கிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajasekar Jayaraman
ஏப் 02, 2025 16:10

கருணாநிதி காலம் முதல் மணல் திருடியது தான் நடந்தாய் வாழி காவேரி திட்டம்.


எவர்கிங்
ஏப் 02, 2025 13:03

எப்போது காலி செய்யுமோ


அப்பாவி
ஏப் 02, 2025 11:56

மாநிலத்தின் பங்கு 40 பர்சண்ட் போட்டு எடுத்து பங்கு போட்டு முடிச்சிருப்பாங்களோ? கணக்கு சரியா இருக்கு.


vbs manian
ஏப் 02, 2025 09:10

இப்போதெல்லாம் மழைக்காலத்தில் கூட காவேரியில் தண்ணீர் இல்லை. வெறும் மணல்தான். அது கூட வாரியது போக மிச்சம். காற்றில் பலூன்.


sankaranarayanan
ஏப் 02, 2025 08:57

நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை, இரண்டு கட்டமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சரே காவிரி எங்கேயப்பா நடந்து வருகிறது ஆங்காங்கே உட்கார்ந்து விடுகிறது மணல் திட்டுகள் நிறைந்த காவிரியை கல்லணை முதல் திருக்காட்டுப்பள்ளி வரையில் உள்ள இடங்களை சென்று பாருங்கள் இதனால் அங்கே இருபக்க கரைகளும் தண்ணிரால் அரிக்கப்பட்டு நாளைடைவில் காவிரி திசைமாற்றி செல்ல நேரிடும் ஜாக்கிரதை


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 02, 2025 06:16

அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் உறுப்பினர் கேள்வி சென்ற கூட்டத் தொடரில் அமைச்சர் கூறியது போல ஏன் நடந்தாய் வாழி காவேரி திட்டம் துவங்க படவில்லை. அமைச்சர் பதில் ஒன்றிய அரசு தனது பங்கை இன்னும் விடுவிக்கவில்லை. ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. உடனே முதல்வர் எழுந்து தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தும். திமுகவின் குரல் டெல்லியில் ஒலிக்க வேண்டும். சபாநாயகர் நன்றி இத்துடன் இந்த கூட்டத்தொடர் முடிந்தது. அடுத்த கூட்டத் தொடர் பற்றிய அறிவிப்பு வரும் வரை உறுப்பினர்கள் தத்தமது தொகுதிக்கு சென்று வளர்ச்சி பணிகள் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு செய்யலாம். நன்றி வணக்கம்.


Appa V
ஏப் 02, 2025 06:13

இவுங்க போடற திட்டம் எல்லாம் நாலு ஆண்டுகள் ஆட்சிக்கு வந்த பின்பும் திட்ட நிலைமையிலேயே இருக்கின்றன