உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்கம்பி அறுந்தால் கரன்ட் கட்டாகும்; தானியங்கி சாதனம் பொருத்த முடிவு

மின்கம்பி அறுந்தால் கரன்ட் கட்டாகும்; தானியங்கி சாதனம் பொருத்த முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மின்கம்பம் மேல் செல்லும் கம்பி அறுந்து விழுந்தால், உடனே டிரான்ஸ்பார்மரில் இருந்து, மின்சாரம் வருவதை தானாகவே துண்டிக்கும், 'எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்' திட்டத்தை, மின் வாரியம் செயல்படுத்த உள்ளது. இதற்காக, 2,136 டிரான்ஸ்பார்மர்களில், மின்சாரத்தை துண்டிக்கும், 4,000 தானியங்கி கருவிகள் பொருத்தப்பட உள்ளன.சென்னையில் தரைக்கு அடியில் கேபிள் வழியாகவும், மற்ற இடங்களில் கம்பம் மேல் செல்லும் மின் கம்பி வாயிலாகவும், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன், மின் வினியோகம் செய்யப்படுகிறது. மழை, பலத்த காற்றின் போது, கம்பங்கள் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து விழுகின்றன. அதிலிருந்து வெளியேறும் மின் கசிவால், மின் விபத்துக்கள் நிகழ்கின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மின் கம்பி அறுந்து விழுந்ததும், அதற்கு மின்சாரம் வரும், டிரான்ஸ்பார்மரில் இருந்து, தானாகவே மின் வினியோகம் துண்டிக்கப்படும் திட்டத்தை செயல்படுத்த, 2022ல் மின் வாரியம் முடிவு செய்தது.இது தொடர்பாக, பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன் அடிப்படையில், யானை வழித்தடங்களில், மின் கம்பி அறுந்து விழுவதால் ஏற்படும், மின் விபத்தை தடுக்க, அங்குள்ள டிரான்ஸ்பார்மர்களில் மின்சாரம் செல்வது, உடனடியாக தானியங்கி முறையில் துண்டிக்கும், 'மோல்டட் கேஸ் சர்க்யூட் பிரேக்கர்' திட்டம், 223 டிரான்ஸ்பார்மர்களில் பொருத்தப்பட்டு உள்ளது.அதேபோன்ற தொழில்நுட்பத்தில், 2,136 டிரான்ஸ்பார்மர்களில், மின்சாரத்தை தானியங்கி முறையில் துண்டிக்கும் 4,000 சாதனங்கள் பொருத்தப்பட உள்ளன. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒப்பந்த பணிக்கு, டெண்டர் கோரப்பட்ட நிலையில், தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. தகுதியான நிறுவனத்தை, தேர்வு செய்யும் பணி நடக்கிறது. தற்போது, தானியங்கி முறையில் மின்சாரத்தை துண்டிக்கும் 4,000 சாதனங்கள், அடிக்கடி மின் கம்பி அறுந்து விழும் இடங்களில் உள்ள டிரான்ஸ்பார்மர்களில் பொருத்தப்பட உள்ளன. அவற்றின் செயல்பாடு வெற்றிகரமாக அமைந்தால், இத்திட்டம் மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Karthik
மே 14, 2025 08:14

இந்த தொழில்நுட்பமும் இந்த செயல்முறையுமானது மேலை நாடுகளில் பல ஆண்டுகள் முன்பிருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது தனிநபர் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் அனைத்திற்கும். ஆனால் இந்தியாவில் தற்போது தான் பரிசோதனையை நடக்கிறது.


சாமானியன்
மே 14, 2025 07:02

இந்த வகை டிவைஸ் 1960 லேயே கண்டுபிடித்தது. அதை ஏன் இன்னும் பின்பற்றவில்லை. எந்த இடத்தில் கம்பி அறுந்தது என்று கூட துல்லியமாக அறியமுடியுமே. இது மக்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இதற்கு அதிக செலவும் ஆகாது.


முக்கிய வீடியோ