உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை, கோவை, மதுரையில் 500 மின்சார பஸ் இயக்க முடிவு

சென்னை, கோவை, மதுரையில் 500 மின்சார பஸ் இயக்க முடிவு

சென்னை : சென்னை, கோவை, மதுரையில், 500 மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பங்களிப்புடன், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், முதல் கட்டமாக, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், 625 புதிய தாழ்தள மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதில், தற்போது, 255 மின்சார பஸ்கள் தனியார் பங்களிப்போடு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களால், டீசல் உள்ளிட்ட இதர செலவுகள், 40 சதவீதம் குறைந்துள்ளன. அடுத்த கட்டமாக, 500 மின்சார பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன. இதில், சென்னையில், 320 'ஏசி' பஸ்கள்; கோவையில், 20 'ஏசி' உட்பட 80; மதுரையில், 100 பஸ்கள் என மொத்தம் 500 மின்சார பஸ்கள் இயக்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் ஏற்படுத்தப்படும் என, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை