உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 லட்சம் அலையாத்தி மரக்கன்றுகள் நட முடிவு

6 லட்சம் அலையாத்தி மரக்கன்றுகள் நட முடிவு

சென்னை:''தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில், கடலோர மாவட்டங்களில், 6 லட்சம் அலையாத்தி மரக்கன்று கள் நடவு செய்யப்படும்,'' என, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். உலக அலையாத்தி காடுகள் தினத்தை முன்னிட்டு, சென்னை அடையாறு முகத்துவார பகுதியில், அலையாத்தி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று துவக்கி வைத்தார். பின், அவர் கூறியதாவது: தமிழகத்தில், 14 மாவட்டங்கள், கடலோர பகுதிகளை கொண்டுள்ளன. இங்கு கடல் நீரால் மண் அரிப்பு போன்ற பாதிப்புகளை தடுக்கும் அரணாக, அலையாத்தி மரங்கள் உள்ளன. குறிப்பாக, சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில், கடலோர பகுதிகளை அலையாத்தி மரங்கள் தான் பாதுகாக்கின்றன. தமிழக கடலோர மாவட்டங்களில், இதுவரை, 12 லட்சம் அலையாத்தி மரக்கன்றுகள் புதிதாக நடப்பட்டுள்ளன. நடப்பாண்டில் புதிதாக, 6 லட்சம் அலையாத்தி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு, வனத்துறை தலைவர் ஸ்ரீநிவாஸ் ஆர்.ரெட்டி, தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி