உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5.37 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க முடிவு

5.37 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நடப்பாண்டு பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ், 5.37 லட்சம் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் மாணவ - மாணவியருக்கு, ஆண்டு தோறும் இலவச சைக்கிள் கள் வழங்கப்படுகின்றன.இந்த ஆண்டு பிளஸ் 1 படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்க, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 193.06 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க, அத்துறை சார்பில், நடப்பாண்டு 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இந்நிதியில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச சைக்கிள்கள் வாங்க, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளது.சைக்கிளில், 'தமிழ்நாடு முதலமைச்சரின் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025 - 26' என்ற லோகோ இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சைக்கிள்கள் வழங்கப்பட உள்ள மாணவர்கள் விபரம்:

வகுப்பு மாணவர்கள் மாணவியர் மொத்தம்பிற்படுத்தப்பட்டோர் 83,581 1,08,207 1,91,788மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 81,952 1,00,311 1,82,263ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 68,687 87,780 1,56,467இதர பிரிவினர் 2,652 3,575 6,267மொத்தம் 2,32,872 2,99,873 5,36,745

சைக்கிள்கள் வழங்கப்பட உள்ள மாணவர்கள் விபரம்:

வகுப்பு மாணவர்கள் மாணவியர் மொத்தம்பிற்படுத்தப்பட்டோர் 83,581 1,08,207 1,91,788மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 81,952 1,00,311 1,82,263ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 68,687 87,780 1,56,467இதர பிரிவினர் 2,652 3,575 6,267மொத்தம் 2,32,872 2,99,873 5,36,745


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அயோக்கிய திருட்டு திராவிடன்
ஜூலை 14, 2025 11:37

இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலைமையில் எங்கெங்கு எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்று எல்லாவற்றையும் செய்வார்கள். அடுத்தது தாலிக்கு தங்கம் மடிக்கணினி என்று எல்லாமே வரும். மக்களே சந்தோசமாக வாங்கிக் கொண்டு அந்த அயோக்கியர்களுக்கு ஓட்டு போடுங்கள்


VSMani
ஜூலை 14, 2025 10:51

ஒரு சைக்கிளுக்கு 100 ரூபாய் கமிஷன் என்றால் கூட 5.37 லட்சம் சைக்கிளுக்கு 5.37 கோடி ரூபாய் கமிஷன், 1000 ரூபாய் கமிஷன் என்றால் கூட 5.37 லட்சம் சைக்கிளுக்கு 53 கோடி ரூபாய் கமிஷன் கிடைக்குமே. இந்த பணத்தில் குவாட்டரும் பிரியாணியும் 500 ரூபாய் நோட்டும் கொடுத்து அடுத்த முறையும் ஆட்சியை பிடித்துவிடலாம்.


S.V.Srinivasan
ஜூலை 14, 2025 08:05

தேர்தல் வரைக்கும் இப்படியே மாத்தி மாத்தி உருட்டிக்கிட்டே இருப்பாங்க, அப்புறம் மறந்தே போய்டுவாங்க. ஆனா ஒன்னு, பட்ஜெட் மட்டும் கரெக்டா போட்டு கமிஷன் எடுத்துக்குவாங்க ஹி ஹி


Iyer
ஜூலை 14, 2025 07:43

 நமது நாட்டில் URBAN TRANSPORT நகர எல்லைகளுக்குள் - 100% நடந்தோ, சைக்கிளிலோ, PUBLIC TRANSPORT இலோ - பெட்ரோல் டீசல் செலவின்றி செய்யமுடியும்.  கண்மூடித்தனமாக நாம் பெட்ரோல் டீசலை எரித்து கொடும் நோய்களை உண்டாக்கி , உடலுக்கு வேண்டிய EXERCISE இல்லாமல் சிறு வயதிலேயே சக்கரை, ரத்த அழுத்தம், THYROID போன்ற வியாதிகளுக்கு ஆளாகிறோம்  நகர எல்லைகளுக்குள் டீசல், பெட்ரோல் வாகனங்களை தடை செய்யுங்கள்  மிக வயது முதிர்ந்தோருக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் இலவச ELECTRIC BUS ஓட்டலாம்.  சாலையின் இரு ஓரங்களிலும் மரங்களை வளர்த்தால் - கோடையிலும் நடந்து செல்லமுடியும்.


Padmasridharan
ஜூலை 14, 2025 07:35

நிறைய பேர் இலவச மிதி வண்டிகளும், கணினிகளையும் விற்று பணமாக்குகின்றனர். வீட்டிலிருந்து பள்ளிகூடத்திற்க்கு நடந்து போகின்ற பிள்ளைகளுக்கு எதற்கு சைக்கிள். யோசிச்சு செயல்பட சொல்லுங்க சாமி. அம்மா மாதிரி அப்பா பேர் வாங்கணும்னு பார்க்கிறாங்க. .


Iyer
ஜூலை 14, 2025 07:33

இதில் ஜாதி மதம் என்ன ? எல்லா மாணவர்களும் கட்டாயமாக நடந்தோ அல்லது சைக்கிளில் மட்டும் பள்ளி, கல்லூரி செய்யணும் என்று விதி அமையுங்கள். பெட்ரோல் டீசலில் ஓடும் வாகனங்களை மாணவ மாணவியர் ஓட்டுவதை தீவிரமாக தடை செய்யுங்கள், சுற்றுப்புறம் சுத்தமாகும். மாணவ மாணவியர் HEALTH நன்கு முன்னேறும்


V RAMASWAMY
ஜூலை 14, 2025 07:27

தேவையறிந்து செயல்படுங்கள். அரசியல் லாபத்துக்காக ஊழல் பேருக்கும் திட்டங்களை கைவிடுங்கள்.


ரங்ஸ்
ஜூலை 14, 2025 07:23

கையில காசு வாயில தோசை. நீ சைக்கிள வச்சுக்க, ஓட்டு எனக்கே போடு


ரங்ஸ்
ஜூலை 14, 2025 07:18

அனைவரும் பயன்படுத்துகிறார்களா என்பது உறுதி செய்ய வேண்டும். பல மாணவர்கள் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் வருகிறார்கள் உரிமம் இல்லாமலே.


vadivelu
ஜூலை 14, 2025 06:48

யார் அந்த சைக்கிள் தயாரிப்பாளர். இந்திய முதலாளியா, அந்நிய நாட்டு நிறுவனமா. ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை