உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடல் வள மீட்பு மையங்கள் 14 மாவட்டத்தில் அமைக்க முடிவு

கடல் வள மீட்பு மையங்கள் 14 மாவட்டத்தில் அமைக்க முடிவு

சென்னை : தமிழகத்தில், 14 கடலோர மாவட்டங்களில், கடல் வள மீட்பு மையங்கள் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் துவங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை, 14 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில், கடல் வள பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உலக வங்கி உதவியுடன், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மேற்கொண்டு வருகிறது. கடலோர பகுதிகளை பாதுகாப்பதுடன், அங்கு இயற்கையாக கிடைக்கும் வளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன. தமிழகத்தில், கடலோர மாவட்டம் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு வகையான இயற்கை வளங்கள் கிடைக்கின்றன. இதில், கடலில் கிடைக்கும் மீன்வளம் மட்டுமல்லாது, மண் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக கிடைக்கும் கடல் சார்ந்த வளங்கள் குறித்த தகவல் தொகுப்பு ஏற்படுத்துவது, அவற்றை பாதுகாப்பதற்கான நிலையான வழிமுறைகளை ஏற்படுத்துவது, இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்டத்துக்கு ஒன்று வீதம் கடல் வள மீட்பு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள், மாசு கட்டுப்பாடு வாரியம் வாயிலாக துவங்கியுள்ளதாக அதிகா ரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை