உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜராஜ சோழனுக்கு நிகராக ஈ.வெ.ரா., சிலைக்கு அலங்காரம்  

ராஜராஜ சோழனுக்கு நிகராக ஈ.வெ.ரா., சிலைக்கு அலங்காரம்  

விவசாயிகளுக்காக குடியாட்சி நடத்தியவர், ராஜராஜ சோழன். ஆனால், இந்த மண்ணில் உரம், இடு பொருட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. நெல்லை பாதுகாக்க, கிடங்கு வசதி இல்லை. கொள்முதலில், மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் என குற்றச்சாட்டுகள் உள்ளன. ராஜராஜ சோழன் நிர்வாகத்தை, தி.மு.க., அரசு பின்பற்ற வேண்டும். மாமன்னன் ராஜேந்திர சோழன் மறு வடிவமாக, பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார். மோடியின், ராஜேந்திர சோழன் ஆட்சியை, தமிழகத்தில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையை, திருவள்ளுவர் கோட்டையாக மாற்றி, தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும். மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு மாபெரும் விழா நடைபெறுகிறது. ஆனால், இங்கு அண்ணாதுரை, ஈ.வெ.ரா., கருணாநிதி சிலைகளுக்கும் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்குரியது. அவர்களுடைய பிறந்த நாள், நினைவு நாளில் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். - அர்ஜுன் சம்பத் தலைவர், ஹிந்து மக்கள் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

T.sthivinayagam
நவ 02, 2025 22:42

இருவருமே திராவிடர்கள் தான் அவர் கட்டி கோவில்களில் நடைபெறும் ஏமாற்றுவேலையை கண்டறிந்தவர் இவர்.


நிக்கோல்தாம்சன்
நவ 02, 2025 06:29

நெல் கொள்முதல் விஷயத்தில் தமிழக அரசின் மெத்தனப்போக்கு கடும்கண்டனத்துக்குரியது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை