உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவதுாறு பேச்சு: திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் கைது

அவதுாறு பேச்சு: திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் கைது

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அவதுாறாக பேசிய பா.ஜ., மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜை போலீசார் கைது செய்தனர்.பழனி பெரியப்பா நகரைச் சேர்ந்த பா.ஜ., மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜ். இவர் சில நாட்களுக்கு முன், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த எல்லைதுரை மனைவி குறித்து அவதுாறாக பேசிய வார்த்தைகள் இடம்பெற்றிருந்த வீடியோ பரவியது.இதையறிந்த எல்லைதுரையின் மனைவி புவனேஸ்வரி, பழனி தாலுகா போலீசில் புகார் அளித்தார். பெண்ணை மானபங்கம் செய்யும் வகையில் அவதுாறாக பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கனகராஜை கைது செய்தனர்.விசாரணைக்காக, அவரை தாலுகா ஸ்டேஷனுக்கு போலீசார் நேற்று அழைத்து வந்தபோது, அங்கு பா.ஜ.,வினர் திரண்டனர். இதனால், போலீஸ் ஸ்டேஷன் கதவுகள் அடைக்கப்பட்டு யாரும் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VENKATASUBRAMANIAN
மார் 24, 2025 07:33

தமிழக காவல்துறை ஏன் இப்படி ஆகிவிட்டது. ஒரு உயிரை காப்பாற்ற முடியவில்லை. இதுபோன்ற செயல்களில் உடனே நடவடிக்கை. ஏன் இப்படி ஏவல்துறை ஆகிவிட்டது.


Rajathi Rajan
மார் 24, 2025 13:50

உன் பொண்டாடி அல்லது உன் வீட்டு பெண்களை பற்றி ஏசினால் அவதூறு பேசினால் நீ சரிதான் என போய்டுவ, எல்லாரும் அப்படி போக உன்னை மாதிரியா?


புதிய வீடியோ