உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டம் வாடகைக்கு... பேராசிரியர்கள் மோசடி: கல்லுாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப கவர்னர் உத்தரவு

பட்டம் வாடகைக்கு... பேராசிரியர்கள் மோசடி: கல்லுாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப கவர்னர் உத்தரவு

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் கல்லூரிகளுக்கு அவசியம்இதற்காக போலி நியமனங்கள் மூலம் தனியார் கல்லூரிகள் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம்போலி ஆவணங்களை வைத்து 353 பேராசிரியர்கள் 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணியாற்றுவது கண்டுபிடிப்புஒரே சமயத்தில் பல கல்லூரிகளில் பணியாற்றும் டாப் 5 பேராசிரியர்களின் பட்டியல் வெளியீடுபேராசிரியர்கள் மாரிச்சாமி, முரளிபாபு ஆகியோர் தலா 11 கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர்அரங்கநாதன், வெங்கடேசன், வசந்தா சுவாமிநாதன் ஆகிய பேராசிரியர்களுக்கு தலா 10 கல்லூரிகளில் வேலை மொத்தம் 2000 ஆசிரியர் பணியிடங்களை வெறும் 189 பேர் ஆக்கிரமித்துள்ளனர்மோசடியில் ஈடுபட்ட கல்லுாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.

கவர்னர் உத்தரவு

அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் போலி ஆவணங்கள் மூலம் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக புகார்; மோசடி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க கவர்னர் ரவி உத்தரவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mannan
ஜூலை 29, 2024 01:00

தனியார் கல்வி நிறுவனங்களின் பணி புரியும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அவர்களுடைய சம்பளத்தை பற்றி இங்கே நினைக்க நாதியில்லை. அனைவரும் சொற்ப சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். பத்து வருட வேலை அனுபவம் இருப்பவர்களுக்கே 10,000, 15,000 என்று சம்பளம் தருகிறார்கள். இதை வைத்துக்கொண்டு எப்படி குடும்ப செலவுகளை சமாளிப்பது. அவர்களிடமிருந்து எப்படி தரமான பணியை எதிர்பார்க்க முடியும். 100 நாள் திட்ட பணியில் வேலை செய்பவர்களுக்கு கூட குறைந்தபட்ச கூலி என்று ஒன்று அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் தரக்கூடிய சம்பளம் என்பது மிகவும் மோசமான அளவில் உள்ளது. முதலில் தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.


Anantharaman Srinivasan
ஜூலை 28, 2024 23:18

இந்த திராவிட கூட்டம் தான் மாநில சுயாட்சி வேண்டுமென்று கூப்பாடு போடுகிறது..


r ravichandran
ஜூலை 28, 2024 21:04

உயர் கல்வி துறையின் அமைச்சர் குறித்து அனைவருக்கும் தெரியும், இதில் உள்ள 99 சதவிகித பொறியியல் கல்லூரிகள் கழக கண்மணிகளுக்கு சொந்தமானவை தான்.


r ravichandran
ஜூலை 28, 2024 21:01

மாநில அரசின் கட்டுபாட்டில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் இப்போது தான் இது நடைபெறுகிறதா? இது நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஒன்று தான்.


Ramesh Sargam
ஜூலை 28, 2024 20:22

பட்டம் வாடகைக்கு... பேராசிரியர்கள் மோசடி... நிலைமை இப்படி இருந்தால் நம் நாட்டின் கல்வித்தரம், கல்வித்திறன் எப்படி இருக்கும்? மற்றநாட்டினார்கள் நம் நாட்டை எப்படி மதிப்பார்கள்? இதுபோன்ற தவறு செய்பவர்களை மிக மிக கடுமையாக தண்டிக்கவேண்டும்.


GMM
ஜூலை 28, 2024 19:47

மோசடி நடக்காமல் தடுக்க, மோசடி ஆரம்ப நிலையில் தடுத்து, நடவடிக்கை எடுக்க மட்டும் தான் துணை வேந்தருக்கு, மாநில அரசுக்கு அதிகாரம். போலி ஆவணங்கள், போலி நியமனங்கள் கண்டுபிடிக்க பட்ட பின் கவர்னர், மத்திய அரசு மற்றும் ஏ ஐ சி டி இ மட்டும் தான் நடவடிக்கை எடுக்க அதிகாரம். பல்கலை துணை வேந்தர் தலைமையில் குழு அமைப்பது நிர்வாக விதிப்படி குற்றம். துணை வேந்தருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க அதிகாரம் கிடையாது. எந்த மரபு, நிர்வாக, சட்ட விதி முறைகளை பின்பற்றாமல் நாடு முழுவதும் திராவிடம் செயற்கை அதிகாரங்களை பரப்பி வருகிறது.


S. Narayanan
ஜூலை 28, 2024 19:41

இத்தனை வருடங்களில் இது எப்படி வெளியில் தெரியாமல் இருக்கும். எல்லாம் எல்லோருக்கும் தெரிந்து தான் நடந்து இருக்கிறது. எத்தனை கோடிகள் பணம் சுறுட்டினார்களோ. எல்லாம் சப்தம் இல்லாமல் நடக்கிறது. இதெல்லாம் மத்திய அரசு செய்ய சொன்னதா. ஸ்டாலின் வாய் திறக்காத மர்மம் என்ன


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ