உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திர நகல்களில் ஆதார் எண் அழிப்பு; போலிகளை தடுக்க பதிவுத்துறை அதிரடி

பத்திர நகல்களில் ஆதார் எண் அழிப்பு; போலிகளை தடுக்க பதிவுத்துறை அதிரடி

சென்னை : போலி ஆவணங்கள் தயாரிப்பதை தடுக்கும் வகையில், பதிவான பத்திரங்களின் பிரதிகளை வழங்கும் போது, ஆதார் உள்ளிட்ட அடையாள எண்களை அழித்து கொடுக்கும் பணியை பதிவுத்துறை துவக்கியுள்ளது.சார் - பதிவாளர் அலுவலகங்களில், சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவின் போது, சம்பந்தப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக, ஆதார், பான் எண் போன்றவை பெறப்படுகின்றன. இந்த அடையாள சான்றுகளின் பிரதிகள் பத்திரத்தில் இணைக்கப்படுகின்றன.

கணினியில் பதிவேற்றம்

இவ்வாறு சேர்க்கப்படும் இணைப்பு பக்கங்கள் அனைத்தும், பத்திரப்பதிவுக்கு பின் ஸ்கேன் செய்யப்பட்டு, கணினியில் பதிவேற்றப்படும். இதில், அசல் பிரதி, சொத்து வாங்குவோரிடம் ஒப்படைக்கப்படும். அதில், எந்த விபரங்களும் மறைக்கப்படாது.சொத்து வாங்கவோ, அது பற்றிய விபரத்தை தெரிந்து கொள்ளவோ, யார் வேண்டுமானாலும் சொத்தின் பதிவு நகல்களை பெற முடியும். இதற்கு விண்ணப்பிப்போருக்கு, பத்திரங்களின் பிரதிகள், 'பிடிஎப்' வடிவில், 'இ - மெயில்' வாயிலாக அனுப்பப்படும். இதில், சொத்து விற்பவர், வாங்குபவர், சாட்சிகள் ஆகியோரின் ஆதார், பான் எண்கள் கருப்பு மையால் கோடிட்டு அழிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆதார், பான் எண் போன்றவை தனிப்பட்ட அடையாள சான்றுகள். இவற்றை பிரதி பத்திரங்கள் பெறும் மூன்றாம் நபருக்கு கொடுக்கக்கூடாது என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதை மீறி கொடுத்தால், போலி ஆவணங்கள் தயாரிக்க வழி வகுத்து விடும்.

தனிப்பட்ட தகவல்கள்

பத்திரப்பதிவு செய்வோரின் தனிப்பட்ட ரகசிய தகவல்களை, தேவையில்லாத நபர்களுக்கு தருவதை தடுக்கும் வகையில், பத்திரத்தில் இந்த விபரங்கள் அழிக்கப்படுகின்றன. சொத்து வாங்கும் நபர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், தங்கள் பத்திரத்தின் பிரதியை வாங்கி, அதில் இந்த விபரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kanns
செப் 17, 2024 10:16

Like Banking Sector etc, RealEstate& Registration are Doomed to Fall due to Insistence of Mental Aadhar-PAN SpyMasters


sethu
செப் 17, 2024 09:00

உங்கள் கருத்து சரியானதே திமுக மக்களுக்கு பிரயோசனம் இல்லாத செயல்களை செய்து விளம்பரம் தேடும் கும்பலாக உள்ளது . தமிழனுக்கு விடிவுகாலம் இல்லை .


GMM
செப் 17, 2024 07:41

அசல் பத்திர பிரதி சொத்து வாங்குவோரிடம் மட்டும் ஒப்படைப்பு சரியே. மற்றவர் பெற்றால் செல்லாது. ?ஆவணங்கள் தயாரிப்பது பத்திர எழுத்தர். அவரிடம் கையெழுத்து இல்லாத நகல் இருக்கும். மற்ற பிரதிகளில் ஆதார் போன்ற அடையாளம் அழித்தாலும் பத்திர எழுத்தர் முகவரி கொண்டு ஆதார், சாட்சி அறிய முடியும். பத்திர பதிவில் முந்தய பதிவுகள் எண் மற்றும் நாள் , நிலபரப்பு, பட்டா எண் , வீடுவரி, மின் , குடிநீர் இணைப்பு எண் போன்ற முக்கிய விவரங்கள் தேவை. ஆதார் தனிப்பட்ட ரகசிய தகவல். ? இலவச பஸ் , ஓட்டல் அறை எடுக்க அனைத்திற்கும் ஆதார் கேட்கப்படுகிறது ? முதலில் தனியார் கோவில் சொத்து ஆக்கிரமிப்பு, சட்ட விரோத வக்பு வில்லங்க பதிவை சீர் செய்ய ஒரு தனி பிரிவை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் 1967 க்கு பின் மறு பத்திர பதிவு அவசியம். இந்தியாவில் சென்னை போன்ற பெருநகர் பதிவு மத்திய அரசின் கீழ் வரவேண்டும்.


Lion Drsekar
செப் 17, 2024 07:16

இவர்கள் எவ்வழியோ வழியில் மக்கள் , ஒருபுறம் நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் பதிவு செய்யலாம் இந்த தீர்ப்பில் சமூக விரோதிகளுக்கு கொண்டாட்டம், , எந்த சிவில வழக்காக இருந்தாலும் குறைந்தது 2 தலைமுறைக்கு நடக்கிறது பிறகு மேல் முறையீடு என்று பல கலைமுறைக்கு செல்லும்போது , ஒன்றும் சொல்வதற்க்கே இல்லை, , மொத்தத்தில் ஒரு தெளிவான வழிகாட்டி எங்குமே இல்லாதது வருத்தம், வந்தே மாதரம்


sethu
செப் 17, 2024 09:04

திமுக வின் உண்மை முகத்தை காட்டிய உங்களுக்கு ஒரு ஓ போடணும் , மந்திரியாக இருப்பவனும் போலீசும் அரசு ஊழியர்களும் வக்கீல்களும் சில நீதிபதிகளும் கூட்டாக பொது மக்களின் சொத்துக்கள் குறிப்பாக இந்துக்களின் சொத்துக்கள் களவாடப்படுகிறது இந்து மக்களுக்கு பாதுகாப்பு சேனைகள் அவசியம் தேவை .


முக்கிய வீடியோ