உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உளறிக் கொட்டிய துணை முதல்வர்: கொந்தளித்தார் மோடி

உளறிக் கொட்டிய துணை முதல்வர்: கொந்தளித்தார் மோடி

அரசியல்வாதிகள் என்றாலே ஏதாவது பேசிக் கொண்டேஇருக்க வேண்டும்; அது, மீடியாவிலும் வந்தால் தான் அவர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், என்ன பேசுகிறோம் என்பது குறித்து அவர்கள் என்றுமே கவலைப்பட்டதே இல்லை. இப்படி ஒரு அரசியல்வாதி பேசியது, இரு நாடுகளுக்கு இடையே பெரும் பிரச்னையை ஏற்படுத்திவிட்டது. இப்படி பேசியவர், பா.ஜ.,வைச் சேர்ந்த பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி. 'நேபாளம், இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் அமைதியாக இருந்திருக்கும். நேபாளம் தனி நாடாவதற்கு, காங்கிரஸ் தான் காரணம்' என, பேசிவிட்டார். பீஹாரில், பா.ஜ., மற்றும் முதல்வர் -நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இவர், இப்படி பேசியதைக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி கோபத்தில் கொந்தளித்து, 'தேவையில்லாத, தனக்கு தெரியாத விஷயங்களில் எதுவும் பேச வேண்டாம் என உத்தரவிட்டும், துணை முதல்வர் ஏன் பேசினார்' என, கட்சியின் தேசிய தலைவர் நட்டாவிடம் கேட்டாராம். 'இனி யாரும் எதுவும் பேசக்கூடாது. சமூக வலைதளங்களிலும் இது குறித்து எந்தவித கருத்தும், கட்சியினர் தெரிவிக்க கூடாது. இது, மிகவும் 'சென்சிடிவ்' ஆன விஷயம்' என மோடி சொல்ல, உடனே இதை உத்தரவாக கட்சியினருக்கு தெரிவித்தாராம் நட்டா. நேபாளத்தில் போராட்டம் வெடித்து அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகினார்; பலர் கொல்லப்பட்டனர். அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, தற்காலிக பிரதமராக நியமிக்கப் பட்டுள்ளார். இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இடையே கலாசார உறவு பல நுாற்றாண்டுகளாக தொடர்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே, 1,751 கி.மீ., துார எல்லை, பீஹார், மேற்கு வங்கம், சிக்கிம், உ.பி., மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் உள்ளது. அதிலும் பீஹார் -- நேபாளம் இடையே, 729 கி.மீ., துார எல்லை உள்ளது. பீஹார் மக்கள், நேபாள மக்கள் இடையே திருமணம், வியாபாரம் என பல தொடர்புகள் உள்ளன. அத்துடன், இவர்களுடைய மொழியும் ஏறக்குறைய ஒன்று தான். விரைவில் பீஹார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், துணை முதல்வரின் பேச்சு பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் மோடி கோபப்பட்டாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Sridhar
செப் 14, 2025 14:32

இந்தியாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்தது நேபாள பிரதமர்தானே? அதை இந்திய தரப்பு நிராகரிக்கத்தானே செய்தது? இதை வெளியே சொல்ல என்ன பிரச்சனை? அப்போ வேற எதோ இருக்கு. வீழ்ந்த நேபாள பிரதமர் வேற ராமர் பிறந்தது நேபாளத்தில் என்று சொன்னதால் தான் பதவி இழந்தேன்னு சொல்றதை பாத்தா, ஒருவேளை...


Rathna
செப் 14, 2025 11:24

1951 இல் நேபாள் அரசர் ராணா இந்தியா யூனியனுடன் இணைய விருப்பம் தெரிவித்ததும் அதை அன்றய பிரதமர் மறுத்ததும் வரலாறு. இதை பழைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜீ தனது புத்தகத்தில் எழுதி உள்ளார்.


MARUTHU PANDIAR
செப் 14, 2025 10:32

தலையிருக்க வால் ஆடுவது அழிவுக்கு அச்சாரம் என்று உறுதியாக கூறலாம். அவனவனுக்கு சுய நலம் மற்றும் தான் என்ற ஈகோ என்பது தெரிகிறது. பொது நோக்கத்தை தூள் தூளாக்கிடுவானுங்க.


Barakat Ali
செப் 14, 2025 09:42

பீகார் துணை முதல்வர் பேசியது சரியே.. தமிழகத்திலும், ஆந்திராவிலும் துணை முதல்வர்கள் தங்களது சாயத்தை தாங்களே வெளுத்து பல்பு வாங்குகிறார்கள் ....


ஆரூர் ரங்
செப் 14, 2025 09:35

சிக்கிம் நாட்டை பாரதத்துடன் இணைத்த காலம் வேறு. இப்போ நேபாளத்தில் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆதரவாளர்கள் உண்டு. அவர்கள் நக்சல்களுடன் இணைந்து குடைச்சல் கொடுப்பார்கள். ஏற்கனவே மே.வங்க மாநிலத்துக்குள்ளே நேபாளிகளுக்கு தனி கூர்க்காலாந்து நாடு கேட்கும் பிரச்சனை உள்ளது. அரசியல்வாதிகளுக்கு பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 14, 2025 07:56

அவர் சொன்ன கருத்துக்கள் உண்மையாகவே இருந்தாலும் இன்று நேபாள் தனி நாடாக உதித்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இனி அந்த நாட்டு மக்கள் விரும்பினால் மட்டுமே இந்தியாவுடன் இணைப்பது பற்றி இந்தியா யோசிக்கும். அப்படி ஒரு எண்ணம் அவர்களிடம் இல்லாதபோது இதுபோன்று பேசுவது இன்று சுதந்திரமாக இயங்கும் அந்நாட்டு மக்களிடையே இந்திய எதிர்ப் உணர்வு தோன்றவே வழி வகுக்கும்.


Kasimani Baskaran
செப் 14, 2025 07:47

தேர்தல் நேரத்தில் கண்டதை பேசுவது நல்லதல்ல என்ற பாடம் பாஜகவினர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


venugopal s
செப் 14, 2025 07:19

நான் கூட நாட்டுப் பற்றுடன் அண்டை நாட்டுடன் சுமுகமான உறவை பாதுகாக்க வேண்டி பிரதமர் மோடி அவர்கள் கோபப்பட்டார் என்று முதலில் தவறாக நினைத்து விட்டேன், அப்புறம் தான் தெரிந்தது பீகார் சட்டசபை தேர்தல் தான் காரணம் என்று!


visu
செப் 14, 2025 07:33

இது தேர்தல் உலகம் காங்கிரஸ் என்ன நாட்டுக்கு சேவை செய்யவா தேர்தல்ல நிக்குறாங்க எல்லோர் நோக்கமும் ஒன்றுதான்


vivek
செப் 14, 2025 08:55

அட வீணா போன வேணு... உனக்கு மட்டும்தான் இப்படி தோணும்.... டாஸ்மாக் சரக்கு அப்படி


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 14, 2025 12:51

தேர்தலுக்காக கிம்ச்சை மன்னர் படும் அசிங்கத்தை விடவா மக்களிடம் பெற்ற விண்ணப்பங்கள் வீசி எறியப்பட்டது நினைவில்லையா


PR Makudeswaran
செப் 18, 2025 15:05

நல்லதே நினைத்து பழக்கமில்லை. அது பழக்க தோஷம்.


R.RAMACHANDRAN
செப் 14, 2025 07:14

இந்த நாட்டில் வாக்கு வங்கியை குறி வைத்தே எல்லாம் செய்கின்றனர்.


Abdul Rahim
செப் 14, 2025 10:36

நீ எதுக்கு முந்திரிக்கொட்டை மாதிரி எல்லோரையும் ஒருமையில் எழுதுற?


V Venkatachalam
செப் 14, 2025 10:57

ஆமாம் ஆமாம். காடு மரம் தான் கொள்ளையடிக்கத்தான் இதை ஆரம்பிச்சுது. அது பிளேக் மற்றும் காலரா மாதிரி நாட்டையே நாசம் பண்ணிகிட்டு இருக்கு. இருந்தாலும் சாராய யாவாரிய இப்படி போட்டு தாக்க கூடாது.


Kanns
செப் 14, 2025 07:08

Nothing Wrong Spoken by Bihar DyCMthough Orations Can be Moderate-Polished- Diplomatic. Modi is NOT BJP But One Servant of BJP& Nation