டில்லி உஷ்ஷ்ஷ்: விஜய் மாநாட்டிற்கு ராகுல் வாழ்த்து?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: நடிகர் விஜயின் த.வெ.கா., கட்சியின் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த, அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.தன் மாநாடு, அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என விஜய் விரும்புகிறாராம். மாநாட்டிற்காக, காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து வாழ்த்துகள் வர வேண்டும் என்பது விஜயின் விருப்பம் என சொல்லப்படுகிறது; இதற்காக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறாராம். இந்த விஷயம், டில்லி காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.'சோனியா, ராகுல் அல்லது பிரியங்காவிடமிருந்து எப்படியாவது வாழ்த்து செய்தி வாங்கிவிட வேண்டும்' என்பதில் குறியாக இருக்கிறாராம் விஜய். இதற்கு உதவுபவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் என்றும் டில்லியில் பேசப்படுகிறது.திருமாவளவனுக்கும், ராகுலுக்கும் நல்ல உறவு உள்ளது. இதனால் திருமாவளவன், விஜய்க்கு உதவி செய்கிறாராம். ஏற்கனவே, 'ஆட்சியில் பங்கு' என கூறியதால், தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், தி.மு.க.,விற்கும், வி.சி., கட்சிக்கும் இடையே லேசான விரிசல் துவங்கி விட்டது.'சோனியா, ராகுல், பிரியங்கா இவர்களில் ஒருவர், ஒரே வரி வாழ்த்து சொன்னாலே போதும்... அதை வைத்து மாநாட்டை பிரமாதப்படுத்தி விடலாம்' என, விஜய் திட்டமிட்டுள்ளதாக டில்லியில் செய்திகள் உலா வருகின்றன.