உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எத்தனை ஊழல் புகார் வந்தாலும்... செல்வப்பெருந்தகைக்கு ஜாக்பாட்

எத்தனை ஊழல் புகார் வந்தாலும்... செல்வப்பெருந்தகைக்கு ஜாக்பாட்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் டில்லி வந்து சீனியர்களை சந்தித்து, செல்வப்பெருந்தகைக்கு எதிராக ஊழல் புகார்களை சமர்ப்பித்தனர். தமிழக காங்., தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என, மல்லிகார்ஜுன கார்கேவிடம் வற்புறுத்தினர்.கார்கேயும், இது குறித்து ராகுலிடம் பேசினாராம். ஆனால் ராகுலோ, 'செல்வப்பெருந்தகை தமிழகத்தில் கட்சியை நன்றாக வளர்த்து வருகிறார்' என கூறி விட்டாராம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xnnq3p9f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'தமிழகத்தில் அடுத்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கப்போகிறது. அப்படி ஆட்சி அமைந்தால், அதில் காங்கிரசுக்கு பங்கு உண்டு' என, தி.மு.க., தலைவர் கூறியதாக, ராகுலிடம் தெரிவித்தாராம் பெருந்தகை.இதையடுத்து, 'எத்தனை ஊழல் புகார்கள் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். செல்வப்பெருந்தகைதான் தமிழக காங்., தலைவர்' என, கார்கேவிடம் உறுதியாக சொல்லிவிட்டாராம் ராகுல். தமிழகத்தில், 60 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியில் காங்கிரஸ் இடம் பிடிக்கப் போகிறது என பெருந்தகை கூறியது, ராகுலை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

m.arunachalam
ஏப் 13, 2025 15:45

முறையற்ற வழியில் வந்தவை அனைத்தும் 3 வது பரம்பரையில் அழியும் . சாபம் விட்டு கஷ்டப்பட வேண்டாம் .


Dharmavaan
ஏப் 13, 2025 15:23

பதவி ஒன்றே குறி


Murugesan
ஏப் 13, 2025 12:39

ஊழல்ல சம்பாதித்த பணத்தில வாழுகின்ற திருட்டு ரவுடி, ஏழைகள் முன்னேற்றமடைய சொந்த வண்டிகள் வைத்து வாழ மத்திய அரசு கொடுத்த பணத்தை காங்கிரஸ்காரனுங்க தலைவன், கடைந்தெடுத்த கேவலமான அயோக்கியன் ....


எஸ் எஸ்
ஏப் 13, 2025 11:20

காங்கிரஸ் தலைமை எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி


Sundaran
ஏப் 13, 2025 08:37

கேவலமான பிழைப்பு நடத்துகிறார். இந்திராவை கேவலமாக பேசிய தி மு க வுடன் கூட்டு வைத்தததின் மூலம் சுயமரியாதையை இழந்து விட்டது காங்கிரஸ்.


VENKATASUBRAMANIAN
ஏப் 13, 2025 08:27

இவர்கள்தான் காமராஜர் ஆட்சியை அமைக்க போகிறார்கள். திமுக பல்லக்கு தூக்குகிறார்கள். காங்கிரஸ் தேய்ந்து நிறைய நாள் ஆகிவிட்டது. திமுகவை அண்டினால் மட்டுமே பாராமன்றத்தில் காங்கிரஸ் கொஞ்சம் சீட் கிடைக்கும்.வட நாட்டில் பூஜ்யம்


நிக்கோல்தாம்சன்
ஏப் 13, 2025 08:15

லண்டன், லண்டன் லண்டன், இரண்டு பாஸ்போர்ட் மக்கள்


C KALIDAS
ஏப் 13, 2025 07:51

ஏனுங்க காமராஜர் ஐயாவோட அகிம்சா வாரிசே! உங்க டூட்டியே திமுக வை வளர வைக்கிறது தானே! வேற ஏதோ பேசுகிறீர்கள்!?


nagendhiran
ஏப் 13, 2025 07:49

பிரம்ம அஸ்திரம் இருக்கும் வரை இவனை ஒன்றும்"செய்ய முடியாது?


Barakat Ali
ஏப் 13, 2025 06:57

தலைப்பைப் பார்த்துட்டு விஜயதாரணிதான் மீண்டும் காங்கிரசுக்குத் திரும்புகிறாரோ ன்னு நினைச்சுட்டேன் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை