உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரானில் உள்ள தமிழக மீனவர்களின் மீட்க கோரிக்கை

ஈரானில் உள்ள தமிழக மீனவர்களின் மீட்க கோரிக்கை

ராமேஸ்வரம்: ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஈரான் கிஷ் தீவு பகுதியில் உள்ள தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் படகில் தங்கி உள்ளனர். உடனடியாக தங்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரானில் உள்ள தமிழக மீனவர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளனர்.தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, உள்ளிட்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஈரானில் தங்கி மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர். தற்போது ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வருவதால் ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் ஈரான் கீஷ் தீவில் வசித்து வரும் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இதுவரை இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் வந்து சந்திக்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.ஈரானில் தற்போது தமிழக மீனவர்கள் வசிக்கும் தீவு பகுதியில் இன்டர்நெட் வசதி இல்லாததால் குடும்பத்தினருடன் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஈரானில் உள்ள தமிழர்களை இந்திய அரசு மீட்பதாக செய்தி மட்டுமே வெளி வரும் நிலையில் இதுவரை எந்த தூதரக அதிகாரிகளும் நேரில் வந்து தமிழக மீனவர்களை சந்திக்கவில்லை என அங்கிருக்கும் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஜூன் 30, 2025 17:09

எப்பவாவது இலங்கை, சீன, துபாய், அரேபிய, இஸ்ரேல் மீனவன் இங்கே வந்து தங்கி மீன் புடிக்கிறானா?


புதிய வீடியோ