உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெங்கு காய்ச்சலால் தினமும் 30 பேர் பாதிப்பு

டெங்கு காய்ச்சலால் தினமும் 30 பேர் பாதிப்பு

சென்னை:தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் தினமும், 30 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இம்மாதத்தில் இதுவரை, 1,200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ் - எஜிப்டை' வகை கொசுக்கள், குளிர் மற்றும் மழைக்காலங்களில் தீவிரமாக பெருக்கம் அடைகின்றன. கடந்தாண்டில் மட்டும், 9,121 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 10 பேர் உயிரிழந்தனர். அந்தாண்டில், பருவ மழை காலமான அக்., முதல் டிச., வரையில், 4,500க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது.இந்நிலையில், இம்மாதத்தில் இதுவரை 1,200க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள், கொசு ஒழிப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்த தவறியது தான், டெங்கு பரவலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னை உட்பட சில மாவட்டங்களில், டெங்கு பாதிப்பு உள்ளது. தினசரி, 30 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில உள்ளாட்சி அமைப்புகள், கொசு ஒழிப்பு பணிகளில் தீவிரம் செலுத்தவில்லை. அதேபோல, பனிக்காலம் தொடருவதால், பிப்., மாதம் வரை டெங்கு காய்ச்சல் தாக்கம் இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை