உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: மாநிலம் முழுவதும் ஹிந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: மாநிலம் முழுவதும் ஹிந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- நமது நிருபர் -திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாமலும், அதற்கு அனுமதி வழங்காததை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்து ஹிந்து முன்னணி அமைப்பினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2d8x0hhu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நிலையிலும், தமிழக அரசு தீபம் ஏற்றவில்லை. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.கார்த்தீகை தீபம் ஏற்ற அனுமதி வழங்காத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று(டிச.,07) ஆர்ப்பாட்டம் நடத்த ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்து இருந்தது. இதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் ஹிந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி, உடுமலையில் தமிழக அரசை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணி உள்ளிட்ட இயங்கங்களை சேர்ந்த, 145 பேரை போலீசார் கைது செய்தனர். உடுமலையில், திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற, ஐகோர்ட் உத்தரவிட்டும், அனுமதிக்காமல் தடை செய்த தமிழக அரசைக் கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால், போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரே, ஹிந்து முன்னணி மாநிலச்செயலாளர் அண்ணாதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பா.ஜ., ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்பைச்சேர்ந்தவர்கள் தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதன்பேரில், 12 பெண்கள் உட்பட 85 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி, மரக்கடை பகுதியில், ஹிந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி இல்லாததால், மரக்கடை பகுதியில், தடை உத்தரவு போட்ட இடம் போல காணப்பட்டது அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் வந்தவர்களையும் போலீசார்,வேனில் ஏற்றினர். இதனால், பரபரப்பான சூழல் நிலவியது. ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ., கட்சியினர் தனித்தனியாக கோஷமிட்டபடி வந்தனர். அவர்கள் அனைவரையும், போலீசார் கைது செய்து, குண்டுக்கட்டாக துாக்கி வேனில் ஏற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னையில் கோயம்பேடு 100 அடி சாலையில், ஹிந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் தலைமையில், சினிமா சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன், பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்பட, 200 க்கும் மேற்பட்டோர் திரண்டனர். ஆனால், போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறி, அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது சிலர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வந்த பேருந்தை வழி மறித்தனர். அவர்ளை போலீஸார் குண்டுக்கட்டாக துாக்கி சென்றனர். அப்போது, சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த ஒருவரது மாலை அறுந்ததால், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

திருப்பூர்

இதுபோல, திருப்பூரில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஹிந்து முன்னணி அறிவித்தது. போலீஸ் தடையை மீறி ஹிந்து முன்னணியினர் மாலை குவிந்தனர். தாராபுரம் ரோடு, புதுார் பிரிவு அருகே, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இதுபோல, புஷ்பா சந்திப்பு பகுதியில் மாநில செயலர் செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கைது செய்யப்பட்டனர். ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், கோட்டை மாரியம்மன் கோவில் அருகே, கைகளில் கார்த்திகை தீபம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் முழுதும ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

மதுரை

மதுரை பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிந்து முன்னணி மாநில செயலர் சேவகன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். பெண்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மதுரையை அடுத்த எழுமலை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

கோவை

தமிழக அரசை கண்டித்தும், நீதிபதி சுவாமிநாதனை விமர்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கோவையில், ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அனுமதி மறுத்ததால், செல்வபுரம் ரோடு, சிவாலயா சந்திப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். செட்டி வீதி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ஹிந்து மக்கள் கட்சியினர், சாலையில் அமர்ந்து, 'தி.மு.க.,வை தடை செய்ய வேண்டும்,' என கோஷமிட்டனர். இதையடுத்து, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட, 40க்கும் மேற்பட்டோரை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

vivek
டிச 08, 2025 03:12

பெரிய மொக்கை கருத்து போட்ட அறிவாளி ஓவியர்...இதயம் பத்திரம்


Rajkumar Ramamoorthy
டிச 08, 2025 02:36

ஓட்டை கரெக்டா போடு ...


Sakthi
டிச 08, 2025 02:08

ஓவிய விஜய், கருணாநிதி இப்படி தான் பக்கம் பக்கமா உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவார். அனால் அடுத்த தேர்தலில் மண்ணை கவ்வி வெளியேறுவார். ட்ராவிடியா தாதிகளுக்கு இந்த முறை தே தான். கிடந்தது பிணந்திகிட்டயே இருக்க வேண்டியது தான். தேர்தல் வர வர ரொம்ப முத்தி போச்சு. 200 பத்தவில்லை போல.


Oviya Vijay
டிச 07, 2025 23:51

என் சுற்றத்தில் பலரையும் பார்த்திருக்கிறேன்... கடவுள் கடவுள் என்று அதிலேயே மூழ்கிப் போன பல பேர் அவர்களது வாழ்க்கையின் இக்கட்டான கட்டத்தில் நம்பிக்கையிழந்து இவ்வளவு நாளாக உன்னைத் தானே நம்பியிருந்தேன் கடவுளே... என்னைக் கைவிட்டுவிட்டாயே என்றெல்லாம் புலம்புவதையும் இனி ஒருபோதும் கடவுளையேத் தொழ மாட்டேன் என மனம் நொந்து பேசுவதையும் பார்த்திருக்கிறேன்... ஆக மொத்தத்தில் இவர்களுக்கெல்லாம் தங்கள் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களுக்குப் பழி போட ஒரு ஆள் தேவை. அந்த மனிதரை கடவுள் என்று கூறிக்கொள்வர்... அவ்வளவே... ஆனால் இவர்களது எதிர்தரப்பினரோ தங்கள் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதற்காக கடவுள் மீதோ இல்லையெனில் விதியின் மீதோ பழி போட மாட்டார்கள்... அத்தனைக்கும் காரணமாக தங்களைத் தான் கூறிக்கொள்வார்களேயன்றி பழி போட ஆள் தேட மாட்டார்கள்... தசாவதாரம் திரைப்படத்தில் கடவுள் இல்லையென்று நான் சொல்லவில்லையே... இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் சொல்கிறேன் என கமல் கூறிருப்பார்... இதன் உண்மையான அர்த்தம் சங்கிகளால் என்றைக்குமே புரிந்து கொள்ளவே முடியாது... ஒரு சிம்பிள் லாஜிக்... முடிந்தால் செய்து பாருங்கள்... 2026 தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட 8 மாதங்கள் உள்ளது... சங்கிகள் அனைவரும் இப்போதே அனைத்து கடவுள்களையும் வேண்டிக்கொள்ளுங்கள் தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி ஜெயிக்க வேண்டுமென்று... யாகங்கள் நடத்துங்கள்... பூஜை புனஸ்காரங்கள் என்று என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்... ஆனால் பாஜக அதிமுக கூட்டணி தோற்கும்... அப்போதும் நீங்கள் கடவுளைத் தான் பழிப்பீர்கள்... ஏன் கடவுள் பாஜக அதிமுக கூட்டணியைத் தோற்கடித்தார் என உங்களால் அப்போது விளக்கம் கூறமுடியுமோ... அப்போதும் உங்களுக்கு பகுத்தறிவு வேலை செய்யாது... அந்த நாளின் வரவுக்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன்...


vivek
டிச 08, 2025 02:51

ஓவியமே.... இருநூறுக்கு இரண்டாயிரம் மொக்கை கருத்து...உனக்கு மட்டுமே புரிந்தால் சரி சின்ன தத்தி கமல்


Oviya Vijay
டிச 07, 2025 23:48

இவ்வளவு செய்தும் என்ன பிரயோஜனம்... 2026 தேர்தல் முடிவுகள் வரும் நாளில் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த அனைவரின் எண்ணங்களும் எவ்வாறு இருக்குமெனில் இத்தனை செய்துமா நாம் தோற்றோம் என்பது தான்... இவர்கள் கூறுகிறார்களே இது ஆன்மீக கூட்டம். அரசியல் கூட்டம் அல்ல என்று... ஆனால் 2026 தேர்தலில் பாஜக தமிழகத்தில் தோற்றால் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குரூப் அப்படியே தளர்ந்து சோர்ந்து விடுவார்கள்... அரசியல் ஆதாயம் எதிர்பார்த்து நடைபெறும் இது போன்ற கூட்டங்கள் எதிர்பார்த்த இலக்கை அடையவில்லையெனில் அதோடு இத்தகைய கூட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள்.. அவ்வளவே.... நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியையொட்டி சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தது பலருடைய கவனம் பெற்றது... அது என்னவெனில் நமக்கு முருகன் வேண்டும். ஆனால் பிஜேபி வேண்டாம் என்பது தான்... இது நூறு சதவீதம் உண்மை... தமிழக மக்கள் ஆன்மீகம் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்... ஆனால் மத வெறியை முன்னிறுத்தும் இந்து முன்னணியோ இல்லை பிஜேபியோ தமிழகத்திற்கு வேண்டியதில்லை என்பதே பெரும்பாலானோர் எண்ணம்...


RAJ
டிச 07, 2025 22:39

ஹிந்துக்கள் மிகுந்த நாட்டில் நம் உரிமைக்கு போராடுவது கேவலம்...பல 1000 கோயில்கள் கொண்ட நாடு..... வந்தேறி மதங்கள் நம் பார்ப்பரியத்தை சிதைத்து பல 100 கோவில்களை அழித்து இன்று ஊலை இடுகிறது அமெரிக்காவில்.. சவுதில முடியுமா? ? புரிஞ்சவங்களுக்கு புரிஞ்ச சரி..


Vidhyaalakshmi, Madurai
டிச 07, 2025 22:29

One day the Hindus in TN will understand that BJP was fighting for a particular community of Hindus and not all Hindus. Wish BJP wins come to rule and show their true colours. Then such people will realise. Life is a circle and wish this happens soon to make these people understand what is BJp


Ramesh Sargam
டிச 07, 2025 21:39

ஹிந்துக்கள் இனியும் நமக்கெதுக்கு வம்பு என்று எப்போதும்போல் நினைக்காமல், அவர்களுக்கான உரிமையை பெற ஒற்றுமையுடன் போராடவேண்டும். என்ன திமுகவினரைப்போல வன்முறை போராட்டம் வேண்டாம், அமைதியான முறையில் போராடுவோம்.


Ramanujan
டிச 07, 2025 21:32

கடந்த 400 ஆண்டுகளாக இருந்தது போல் இருப்போம் இப்போது என்ன வந்தது என்று நமது தேச தலைவர்களும் இருந்திருக்கலாமே.


sundarsvpr
டிச 07, 2025 21:13

ஸ்டாலின் வீட்டில் பூஜை அறை இருக்கும். அவர் துணைவியார் ஆன்மிகவாதி. தினமும் விளக்கு ஏற்றிவருவார் என்று கருதுகிறேன். அவர் இல்லம் சமத்துவபுரம் அவர் கடவுள் மறுப்பாளர் அவர் மகன் வேறு மதம் உண்மையான சமுதாயம் அவர் வீடுதான். திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்றாதாது சந்தர்ப்ப அரசியல்.


சமீபத்திய செய்தி