உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூலை 19ல் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு: 2 நாட்களுக்கு மிக கனமழை வெளுக்குமாம்!

ஜூலை 19ல் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு: 2 நாட்களுக்கு மிக கனமழை வெளுக்குமாம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் ஜூலை 19ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோவையில் இன்றும் (ஜூலை 17), நாளையும் (ஜூலை 18) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5hlxe6jx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஜூலை 19ம் தேதி உருவாக வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவையில் இன்றும் (ஜூலை 17), நாளையும் (ஜூலை 18) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Godyes
ஜூலை 17, 2024 17:26

ஏரிகள் குளங்கள் குட்டைகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் வீடுகளும் தெருக்களும் பெருகிவிட்டன குடிசை மாற்று வாரிய வீடுகளில் எவரும் குடி போவதில்லை.


Godyes
ஜூலை 17, 2024 17:21

மக்கள் பெருக்கத்தால் விளை நிலங்கள் சுருங்கி வருகின்றன. 25 கி மூட்டை அரிசி 2000 ரூபாய்க்கு விற்கிறார்கள்.


ديفيد رافائيل
ஜூலை 17, 2024 15:48

இப்பவே Coimbatore முழுக்க this week Monday ல இருந்து ஒரு second கூட நிற்காமல் மழை தூரிகிட்டே இருக்கு. இது உங்க கண் ல பட மாட்டேங்குது.


selvam
ஜூலை 17, 2024 15:02

மழை கொட்டி தீர்த்து விவசாயிகள் செழிப்பு அடைந்தால் சரிதான்.. விவசாயிகள் தான் நமக்கு சோறு போடும் தெய்வங்கள்...


மேலும் செய்திகள்













புதிய வீடியோ