உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதி துணை முதல்வர் இன்றோ, நாளையோ அறிவிப்பு

உதயநிதி துணை முதல்வர் இன்றோ, நாளையோ அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: 'அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக நாளைக்கே அறிவித்து விடுவர்' என, அமைச்சர் அன்பரசன் நேற்று காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.தி.மு.க.,வின் 75வது ஆண்டு பவள விழாவையொட்டி, தி.மு.க., கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம், வரும் 28ம் தேதி மாலை, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி அருகே நடக்க உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tq36qjvj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கான பாதுகாப்பு, வாகன பார்க்கிங், பந்தல் அமைப்பது போன்ற முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு நடத்த, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், பச்சையப்பன் கல்லுாரி அருகே கூட்டம் நடக்கும் இடத்திற்கு நேற்று வந்திருந்தார்.விழா நடக்கும் இடத்தை அமைச்சர் அன்பரசன் பார்வையிட்ட பின் அளித்த பேட்டி: தி.மு.க., பவள விழாவையொட்டி நடக்கும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அவ்வளவு பேரும் கலந்துகொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காஞ்சியில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் 50,000 பேருக்கு மேல் பங்கேற்க உள்ளனர்.விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விரைவில் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார். ஒரு வாரத்திற்குள் அவர் துணை முதல்வராக்கப்படுவார். ஏன், இன்றோ, நாளையோ கூட அறிவிப்பு வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
செப் 20, 2024 16:13

உதயநிதியை துணை முதல்வராகப் பார்க்க திமுகவினரை விட பாஜகவினர் தான் அதிக ஆர்வமாக உள்ளனர்!


Matt P
செப் 21, 2024 12:29

உங்களுக்கு அவர் துணை முதல்வராவதில் ஆர்வம் இல்லையா? ..வெளியே துறை முருகன் ஆதரவாக பேசலாம். வீட்டில் குடும்பத்தாரிடம் பேசும்போது , நாய் போல அந்த குடும்பத்துக்கு உழைச்சு என்ன பிரயோஜனம் என்று கூட ஏசியிருக்கலாம்.


ஆரூர் ரங்
செப் 20, 2024 11:59

இளவசர் பட்டம் ஏற்கிறாரா? பட்டத்து இளவரசி யார்? ஓ அவரா?.


ராமகிருஷ்ணன்
செப் 20, 2024 11:54

வெக்கம் மானம் ஈனம் சூடு சொரணையற்ற கும்பலுக்கு யார் என்ன சொல்லி திட்டினாலும் அறிவு வரப்போவதில்லை.


spr
செப் 20, 2024 09:52

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விரைவில் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார். ஒரு வாரத்திற்குள் அவர் துணை முதல்வராக்கப்படுவார். ஏன், இன்றோ, நாளையோ கூட அறிவிப்பு வரலாம். அப்போ நிழல் முதலமைச்சர் சேகர் பாபு என்ன செய்வார்? அத்தனை எளிதில் விட மாட்டாரே ஒரு வேளை அவரது பினாமியாக உதையா பணி செய்வாரோ அவரால் தனியாக எதுவும் செய்யத் தெரியாது என்பதால்தானே இவர்களெல்லோரும் அவரை முதலமைச்சராக்கப் பார்க்கிறார்கள்


R.MURALIKRISHNAN
செப் 20, 2024 09:05

அந்த பதவிக்கு அருகதையற்றவர்


Rajarajan
செப் 20, 2024 08:38

பக்தியில் காவடி எடுத்தால் அது மூட நம்பிக்கை. வயிற்றுக்கு குடும்ப காவடி எடுத்தால் அது அன்ன காவடி. ஆமாங்க, ஒரு ஜான் வயிற்றுக்கு.


VENKATASUBRAMANIAN
செப் 20, 2024 08:24

திருட்டு கும்பல் தங்களை காப்பாற்றிக் கொள்ள ஜால்ரா தட்டுகிறார்கள்.


Kumar Kumzi
செப் 20, 2024 08:07

டேய் பரம்பரை கோபாலபுர கொத்தடிமைங்களா ஸ்வீட் எடுத்து கொண்டாடி அடிமை சாசனத்தில் கையெழுத்து போட்டுட்டு டப்பாஸ் கொளுத்துங்க ....


Mani . V
செப் 20, 2024 05:54

கெட்ட செய்தியைச் சொல்வதற்கு எதற்கு நாள், நட்சத்திரம் பார்க்கணும்? மக்களின் தலையெழுத்து அதுதான் என்னும் பொழுது யார் என்ன செய்ய முடியும்?


Kasimani Baskaran
செப் 20, 2024 04:35

எதற்கு துணை, இணை, பிணை என்று மாற்றி மாற்றி சொல்ல வேண்டும் - நேரடியாக முதல்வர் என்று அறிவித்தால் ஒரு நேரம் பழைய மாணவர்களை சமாளித்தால் போதுமே. பின்னர் தானாக அடங்கிப்போவார்கள்.


புதிய வீடியோ