உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்ச வழக்கில் சிக்கிய துணை தாசில்தார் தப்பி ஓட்டம்

லஞ்ச வழக்கில் சிக்கிய துணை தாசில்தார் தப்பி ஓட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்று வழங்க 20000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளதுபெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள வெங்கடாஜலபதி நகரில் கட்டப்பட்ட திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்று வழங்க அதன் மேலாளர் துரைராஜிடம், துணை தாசில்தார் பழனியப்பன் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விருப்பமில்லாத துரைராஜ், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி துரைராஜ், ரூ.20 ஆயிரம் பணத்தை பழனியப்பனிடம் கொடுத்தார். அந்த பணத்தை, வாங்கி வைக்குமாறு அங்கிருந்த கீழக்கரை வி.ஏ.ஓ., நல்லுசாமியை பழனியப்பன் அறிவுறுத்தினார். இதனையடுத்து நல்லுசாமி பணத்தை வாங்கினார். இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது துணை தாசில்தார் பழனியப்பன் தனக்கு இதயம் படபடப்பாக இருப்பதாகவும் மருத்துவமனையில் சேர்க்குமாறும் கேட்டுக் கொண்டதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விஏஓ நல்லுசாமியை மட்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனியப்பன் இன்று (ஜூலை 02) அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் இருந்து தலைமறைவாகிவிட்டார். தகவலறிந்த பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் பழனியப்பனை தேடி வருகின்றனர். மாவட்ட உயரதிகாரி ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, பழனியப்பன் மீது கரிசனம் காட்டுமாறு கூறியதைத் தொடர்ந்தே மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

P Elumalai
ஜூலை 04, 2024 05:39

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்


P Elumalai
ஜூலை 04, 2024 05:37

பொதுமக்கள் தொடர்புள்ள வருவாய்த்துறை மின்சார வாரியம் காவல்துறை, பதிவுத்துறை அலுவலகம், போன்ற அனைத்து துறைகளிலும் லஞ்சம் இல்லாத அலுவலகம் கிடையாது என்ற அவலநிலை தொடர்கிறது. அரசு பல சட்டங்களை இயற்றினார் உம் அதிகாரிகள் கடைபிடிப்பதில்லை பலரை லஞ்ச வழக்கில் கைது செய்வதை தெரிந்தும்


karthi sengazhani
ஜூலை 03, 2024 14:56

ஜெயன்கொண்டம் தசிலேடைகர்,வாவ்,அண்ட் ரோடோ லாம் எப்போ pudippinga


silverrose giri
ஜூலை 02, 2024 20:55

அமைச்சர் தலையிட்டு 2 நபர்களுக்கும் விரைவில் பதவி உயர்வு அளிக்கப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை முகத்தில் கரி பூசப்படும் திராவிட மாடல் அரசால்


Indian
ஜூலை 02, 2024 20:02

இதனை மனவருத்தத்துடன் எழுதுகிறேன் , கடந்த வாரம் நில அடங்கல் வாங்குவதற்காக V.A.O, office சென்றிருந்தேன் அப்போது ஒவொருவரும் Rs. 100 VAO எதிரே இருந்த தலையாரி வசூல் வேட்டையை என் கண்ணால் கண்டுகளித்தேன். எனக்கும் அடங்கல் பூர்த்திசெய்து கிடைத்தது. இப்போ தலையரிடும், நான் என்னிடம் Rs.100 இல்லை என்றேன் . தலையாரி புரிந்துகொள்ளாத மாதிரி இருந்தார் . இந்த குறிப்பில் பெயர் சொல்ல விரும்பவில்லை. அறிய விரும்பின் call me 9846160118.


paulson wesly
ஜூலை 02, 2024 15:02

அந்த மாவட்ட உயரதிகாரி மீது கைது நடவடிக்கை எடுத்து ஜெயிலில் அடைக்க வேண்டும்


Kannan
ஜூலை 02, 2024 14:03

லஞ்சம் தேசிய வியாதி.


krishnamurthy
ஜூலை 02, 2024 13:01

உண்மையானால் அந்த மேலதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


Jysenn
ஜூலை 02, 2024 12:32

Direct promotion to Collector may not be ruled out in the Diravida Model Governance.


ديفيد رافائيل
ஜூலை 02, 2024 11:56

இந்த மாதிரியான ஆளுங்களுக்கு தான் government job கிடைக்கும் போல.


மேலும் செய்திகள்