உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேவர் குருபூஜை பாதுகாப்புக்கு வந்த பெண் தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!

தேவர் குருபூஜை பாதுகாப்புக்கு வந்த பெண் தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!

கமுதி; பசும்பொன் தேவர் குருபூஜை பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த பெண் காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் வரும் 30 தேதி முத்துராமலிங்கத் தேவரின் 63_வது குருபூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.இதன் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு 8000 போலீசார் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் காவல் பணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தலைமை காவலர் கலைவாணி (41) என்பவர் வந்துள்ளார். இவர் நேற்று இரவு 12 மணியளவில் கமுதியில் உள்ள தனியார் பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இருமல் தொடர்ச்சியாக ஏற்பட ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த கலைவாணியின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Krismoo
அக் 29, 2025 17:40

தேவர் குரு பூஜைக்கு 8000 போலீசார் பாதுகாப்பிற்கு? விஜய் மீட்டிங்கு இதே மாதிரி 8000 போலீசாரை பாதுகாப்பிற்கு அனுப்பிஇருக்கலாமே. 41 பேரின் மரணத்தை தவிர்த்திருக்கலாம். ஆடுங்கடா உங்க அரசியல் ஆட்டத்தை 2026 வரை.


திகழ் ஓவியன்
அக் 29, 2025 12:22

எல்லாம் அரசியலேயன்றி வேறில்லை...


Baskaran
அக் 29, 2025 11:56

குருபூஜை ஏன் இவ்வளவு பாதுகாப்பு செலவு... தமிழகம் 30 வருடமாக பின்தங்கியுள்ளதை காட்டுகிறது


sundarsvpr
அக் 29, 2025 11:00

பசும்பொன் தேவர் குரு பூஜை அரசு விழா இல்லை. ஒரு கட்சி நடத்துகிறது. இதற்கு காவல் பணி அரசு கொடுக்கவேண்டுமா? ஒரு தனிப்பட்ட நபர் வீட்டின் வாசலில் சுவாமி எழுந்தருள்கிறார் இதற்கு அமைச்சர்கள் வரவில்லை அரசிடம் காவலர் பாதுகாப்பு கேட்டால் வழங்கித்தான் ஆகவேண்டுமா? யார் கணக்கில். பெண் தலைமை காவலர் மரண இழப்பு செலவுகள் கட்சியிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும். 5000 காவலர் அவசியம் தானா என்பதும் பரிசீலிக்கப்பட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை