உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேவர் குருபூஜை: திறந்தநிலை வாகனங்களில் வர தடை

தேவர் குருபூஜை: திறந்தநிலை வாகனங்களில் வர தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு வாடகை வாகனங்கள், திறந்த நிலை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பசும்பொன்னில் அக்.29, 30ல் நடக்கும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாதொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவகலத்தில் நேற்று நடந்தது. தலைமை வகித்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியதாவது:மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள பிரிவு 163(1) தடை உத்திரவின் படிபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைவிழாவிற்கு வாடகை வாகனங்கள் மற்றும் டூவீலர்கள், டிராக்டர், ஆட்டோ, சரக்கு வாகனம் ஆகியதிறந்த வெளிவாகனங்களில் வந்து கலந்து கொள்ள அனுமதி இல்லை. சொந்த நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி., அலுவலகங்களில் வாகன அனுமதிச் சீட்டு பெற வேண்டும். சொந்த வாகனத்தை வாடகைக்குவிடக்கூடாது.வழித்தடத்தில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அந்தந்தமாவட்டங்களில் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் அக்.,29, 30ல் கமுதிக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தரப்படும். விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றார். எஸ்.பி., சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உள்ளிட்ட அதிகாரிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sundarsvpr
அக் 05, 2024 17:50

உருவ சிலைக்கு மாலை போடுவதோ மரியாதை செலுத்துவது இவர் உயிரோடு இருக்கும்போது திட்டிய வார்த்தைகளும் நினைவுக்கு வரும்.


venugopal s
அக் 05, 2024 16:37

குரு பூஜை என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் ரோட்டில் செய்யும் அராஜகம் இருக்கிறதே அந்தக் கொடுமையை என்ன சொல்வது?மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். போலீஸும் இவர்களை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கின்றனர்.


Kumar Kumzi
அக் 05, 2024 12:09

சிறுபான்மையின ஓட்டு பிச்சைக்காரன் கேடுகெட்ட சுடலை காட்டேரிகளை தாஜா பண்ணுவதற்காக இந்துக்களை அடிமையாக நடத்துறான் ஓவாவுக்கு ஓட்டு போட்டுட்டு இப்பிடி கேவலப்படுறீங்களே


Kumar Kumzi
அக் 05, 2024 12:03

சிறுபான்மையின ஓட்டு பிச்சைக்காரன் கேடுகெட்ட சுடலை இந்துக்களை அடிமையா நடத்துறான் ஓவாவுக்கு ஓட்டு போட்டா இப்பிடி தான் கேவலப்படணும்


Srinivasan Krishnamoorthi
அக் 05, 2024 11:03

குரு பூஜை என்பது தேவர் சமாதியில் நடக்கும். அவர் உருவ படம் ஊர்வலமாக எடுத்து செல்ல படும். மறைந்த நாள் என்றால் ஆராதனையாக நடக்கும் . சைவ உணவு அன்னதானம் அளிக்க படும். பிறந்த நாள் என்றால் விழாவாக கொண்டாடப்படும். வாணவேடிக்கை ஆரவாரம் இருக்கும். திறந்த வெளி வாகனம் கூடாது என்பது தெஹ்லிவில்லாத பொது தடை.


narayanansagmailcom
அக் 05, 2024 09:45

மாடல் அரசு அமைச்சர் மற்றும் நிர்வாகி கார்களுக்கு மட்டும் அனுமதி உண்டு


Kasimani Baskaran
அக் 05, 2024 08:17

கயிறு கட்டக்கூடாது, கோஷம் போடக்கூடாது என்றெல்லாம் தீம்க்கா ஆட்சி சொல்லாவே சொல்லாது - ஏனென்றால் ஒட்டு நக்கிக்கொண்டு போய்விடும்.


Vaira. Anbarasan
அக் 05, 2024 08:15

தேவர் குரு பூஜை யில் மக்கள் கூடுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் அது வே அரசின் நோக்கமாக தெறிகிறது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை