உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் தவிர்க்க தேவசம் போர்டு வேண்டுகோள்

இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் தவிர்க்க தேவசம் போர்டு வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: 'சபரிமலை வரும் பக்தர்களின் இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும்' என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.சபரிமலை பக்தர்கள், தலையில் ஏந்திவரும் இருமுடி கட்டில் நெய் தேங்காய், தேங்காய், அரிசி, பன்னீர், சாம்பிராணி, கற்பூரம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் இருக்கும். நெய் தேங்காயில் உள்ள நெய்யை பாத்திரத்தில் எடுத்து, அய்யப்பனுக்கு அபிஷேகத்திற்கு வழங்குவர். 18 படிகளில் ஏறும் போது, தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. அரிசி, பாயசம் வழிபாடு கவுன்டர்களில் வழங்க முடியும்.மீதமுள்ள சாம்பிராணி, பன்னீர், கற்பூரம், மஞ்சள் போன்ற பொருள்கள் மாளிகைப்புறம் கோவில் அருகே பக்தர்கள் விட்டுச் செல்கின்றனர். இவற்றை பூஜைக்கு பயன்படுத்த முடியாததால், பக்தர்கள் அவற்றை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று தந்திரி, மேல் சாந்தி போன்றோர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.எனினும், பக்தர்கள் இவற்றை கொண்டு வந்து மாளிகைப்புறம் அருகே போடுகின்றனர். இவை, கனரக இயந்திரங்கள் மூலம் எடுத்துச் சென்று, காட்டுப் பகுதியில் எரிக்கப்படுகின்றன. எனவே, இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை எடுத்து வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளது.வரும் சீசனில், தினமும் 70,000 பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலமும், 10,000 பேர் ஸ்பாட் புக்கிங் மூலமும் அனுமதிக்கப்பட உள்ளனர். ஆன்லைன் முன்பதிவு தற்போது நடைபெறுகிறது.முன்பதிவு செய்ய முடியாமல் ஸ்பாட் புக்கிங் செய்து வரும் பக்தர்கள், கட்டாயமாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள வசதியாக, கியூ.ஆர்., கோடு மற்றும் புகைப்படம் அடங்கிய பாஸ் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Makkal en pakkam
நவ 08, 2024 20:36

வேளாண் மாணவர்களுக்கு வேளாண்மை சார்ந்த டிஜிட்டல் வேளாண் கணக்கெடுப்பு வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது


அப்பாவி
நவ 07, 2024 07:10

அப்பிடியே அழுக்கு வேட்டியை பம்பா நதியில் அவுத்து விட்டுற வாணாம்னு சொல்லுங்க. தத்திகளுக்கு புரியவே மாட்டேங்குது.


Smba
நவ 07, 2024 04:14

என்ன ஒரு புத்திசாலிதனம் முடர்க கையில் அதிகாரம்


புதிய வீடியோ