உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆரோவில்லில் வளர்ச்சித் திட்டங்கள் ஆட்சி மன்ற குழு கலந்துரையாடல்

ஆரோவில்லில் வளர்ச்சித் திட்டங்கள் ஆட்சி மன்ற குழு கலந்துரையாடல்

வானுார்: ஆரோவில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர்.விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் ஆட்சி மன்ற குழுவில் உள்ள நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நிரிமா ஓசா, அரவிந்தன், நீலகண்டன், பேராசிரியர்கள் கவுதம் கோசல், சர்ராஜு, சீதாராமன், ஆரோவில் சிறப்பு பணி அதிகாரி வஞ்சுளவள்ளி உள்ளிட்டோர் ஆரோவில் வருகை தந்தனர். அங்குள்ள முக்கிய குழுக்களான நிதி மற்றும் சொத்து மேலாண்மைக் குழு, ஸ்ரீ அரவிந்தர் சர்வதேச கல்வி மையம், மாத்ரி மந்திர் பணிக்குழு மற்றும் நில வாரியம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.தொடர்ந்து, ஆரோவில் மாத்ரி மந்திர் ஏரி பணிகளை பார்வையிட்டனர். பணி தொடர்பாகவும், முன்னேற்றம் குறித்தும், இப்பணியை நிர்வகிக்கும் மைக்கேல் போன்கேவிடம் கேட்டறிந்தனர்.இது தொடர்பாக குழு நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில், 'ஆரோவில் சமூகத்துக்குள் உரையாடல் நிகழ்வது புரிதலை வளர்க்கும். குழுவின் அர்ப்பணிப்பை அனைவரும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். முக்கியமாக ஆரோவில் நகரத்தின் தற்போதைய வளர்ச்சி தொடர்பாக மேம்பாடு குறித்தும் இந்த கலந்துரையாடல் முக்கிய பங்கு வகித்தது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ