உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிருங்கேரி இளைய சங்கராச்சாரியாருக்கு காஞ்சியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு

சிருங்கேரி இளைய சங்கராச்சாரியாருக்கு காஞ்சியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: சிருங்கேரி சாரதா பீடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகள், நேற்றிரவு காஞ்சிபுரம் வந்தடைந்தார். அவருக்கு, பக்தர்கள், பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.கர்நாடகா மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கா நதிக்கரையில், சிருங்கேரி சாரதா பீடம் உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j3q3d76t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகள் பங்கேற்கும் விஜய யாத்ரா, சென்னையில் நடக்கிறது.இதற்காக, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, காஞ்சிபுரத்தில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்திற்கு, ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகள் நேற்று புறப்பட்டார்.தமிழக எல்லையான ஓசூரை நேற்று மாலை, 5:35 மணிக்கு வந்தடைந்தார்.அவருக்கு, மூக்கண்டப்பள்ளி லால் பஸ் நிறுத்தம் அருகே, தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஓசூர் கிளை, ஓசூர் பக்த ஜன சபா, ஷேத்ரம் சங்கர தபோவனம், ராதாகிருஷ்ண பஜனை மண்டலி மற்றும் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகா பக்தர்கள் சார்பில், பூரண கும்ப மரியாதையுடன், மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆசி வழங்கி விட்டு, நேற்றிரவு 8:05 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு விஜயம் செய்தார். கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை வரவேற்றார்.அங்கு, அனைத்து சன்னிதிகளிலும் பூஜை செய்த ஸ்ரீவிதுசேகர பாரதீ சன்னிதானம், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.பின் அங்கிருந்து, 8:35 மணிக்கு காரில் புறப்பட்டு அவர், நேற்றிரவு காஞ்சிபுரம் வந்தடைந்தார்.அவருக்கு, பக்தர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். காஞ்சிபுரத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், நாளை சென்னை வந்தடைகிறார்.அங்கு, நவ., 13 வரை தங்கியிருந்து, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rasheel
அக் 27, 2024 12:03

அனைவருக்கும் நன்மையை வேண்டுவது சனாதனம் மரங்கள், விலங்குகள், பறவைகள், நுண் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் பிறப்பிற்கும் காரணம் உள்ளன. அவை அனைத்தும் நல் வாழ்வை சனாதனம் பிரார்த்தனை செய்கிறது.


Ramesh Sargam
அக் 27, 2024 12:01

நேற்று இளைய ஸ்வாமிகள் பெங்களூரில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். இரண்டு லட்சத்துக்கும் மேல் பக்தர்கள் கூட்டம். இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த இடம், Palace Ground அங்கு பெய்த கனமழையால் தண்ணீர் சமுத்திரமாக காட்சி அளித்தது. ஆனால் நேற்று அவை எல்லாம் வற்றி, மக்கள் சமுத்திரமாக காட்சியளித்தது. அந்த அளவுக்கு பக்தர்கள் கூட்டம். அதிகம் மக்கள் கூட்டம் என்று Bharath Book of Records என்கிற புத்தகத்தில் இடமும் பெற்றது. வாழ்க ஹிந்து முறை வாழ்க்கை. ஹிந்து என்பது மதம் அல்ல. அது எல்லா மதத்தினரையும் நல்லமார்கத்தில் அழைத்து செல்லும் ஒரு வாழ்க்கை முறை. சங்கரம் போற்றி. சங்கராச்சார்யம் போற்றி.


Palanisamy Sekar
அக் 27, 2024 04:41

ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர..சுவாமியின் பாதம் படுகின்ற இடமெல்லாம் புண்ணியஸ்தலம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை