உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடி முதல் வெள்ளி; அம்மன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்

ஆடி முதல் வெள்ளி; அம்மன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை முதலே பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.ஆடி முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சி கமாட்சி அம்மன், திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில்களில் அதிகாலை 2 மணி முதலே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதல் பெண் பக்தர்கள் அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி, வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மடப்புரம் காளி கோயில்

இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில், காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பெண்கள் நெய் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். மடப்புரம் காளி கோயிலில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில்களில் சுவாமிக்கு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் காளியம்மன் கோயிலில் அமைந்துள்ள மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கே.கே. புதூர் தெரு எண் - 8ல் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் மூலவர் அம்மன் வேப்பிலைகளுக்கு நடுவே மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரசாதம், அன்னதானம்

கோவை பெரிய கடை வீதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோயில், அவினாசி ரோட்டில் அமைந்துள்ள தண்டு மாரியம்மன் கோயில், காட்டூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், விளையாட்டு மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ram pollachi
ஜூலை 18, 2025 15:55

ஒருத்தன் கொட்டாவி விட்டால் அருகில் இருப்பவர்களும் வாயை பிளக்க ஆரம்பித்து விடும் விநோத பழக்கம் உண்டு கவனித்து பாருங்கள்...


தத்வமசி
ஜூலை 18, 2025 14:14

பக்தி இருப்பது அவசியம் தான். ஆனால் உண்மையான பக்தியா என்றால் புரியவில்லை. பொழுதை நல்ல விதமாக கழிக்க வேண்டும் என்பதற்குத் தான் திருக்கோவில்கள் அமைந்தன. ஆனால் அங்கு நல்ல பொழுதாக கழிகிறதா என்றால் சுத்தமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கோவில்களில் கோடிகள் கொட்டுகின்றன. வியாபாரம் தான் பெருத்துள்ளது. இதை அரசு இயந்திரமே முன்னின்று செய்கிறது. கோவில்களுக்குச் செல்வதால் நம் மனது பண்பட வேண்டும். பொழுது போக்கிற்காக, எங்காவது செல்லவேண்டும், செலவில்லாத டூர் கோவில் தான். இப்போது பிரசாதம் எல்லா கோவில்களிலும் எல்லா நேரத்திலும் கிடைக்கிறது. சில கோவில்களில் பிரசாதங்கள், தோசை, இட்டிலி மிளகாய் பொடியுடன் பலவிதமான பலகாரங்கள் எல்லாம் விற்கிறார்கள். பக்தியா ? பொழுது போக்கா ? வேண்டுதலா ? கோவிலில் விசேஷமா ? என்றெல்லாம் இல்லை. சிறியதோ பெரியதோ நமது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்றாலே போதும். குற்றாலம் செல்லும் வழியில் கோவிலுக்குச் சென்று வருவது ஒருவித சுற்றுலா. பக்தி உண்மையிலேயே இருந்தால் கோவிலை இடிப்பவர்களுக்கும், நாத்திகவாதிகளுக்கும், அவர்களுக்கு துணை செல்பவர்களுக்கும் கட்டாயம் ஓட்டு போடமாட்டார்கள். காசு வாங்கி ஓட்டுப் போட்டு விட்டு, கடவுளே என்னைக் காப்பாற்று என்று என்றால் எப்படி ?


sridhar
ஜூலை 18, 2025 12:41

இதில் பாதி பேர் இந்த நம்பிக்கைகளை கேலி செய்யும் திமுகவுக்கு தான் வோட்டு போடுவார்கள் .


Sriniv
ஜூலை 18, 2025 12:07

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே சரணம் Please report also about the famous Amman temples in Chennai.


shan
ஜூலை 18, 2025 11:13

கொட்டாவி விடும் போதா photo எடுப்பீர்கள்?


முக்கிய வீடியோ