மருதுார் வள்ளலார் இல்லத்தில் பக்தர்கள் குவிந்தனர்
புவனகிரி: வள்ளலார் அவதார தினமான நேற்று, புவனகிரி அருகே மருதுாரில் அவர் அவதரித்த இல்லத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே மருதுாரில் வள்ளலார் அவதரித்தார். அவரது 202வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நேற்று காலை 8.00 மணிக்கு மருதுார் அவதார இல்லத்தில் அகவற்பா இசைத்து, சன்மார்க்க கொடி ஏற்றினர். வள்ளலார் அவதார இல்லத்தில் ஏராளமான பக்தர்கள் தியானம் செய்தனர். மலரால் அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் பக்தர்கள் மலர் மற்றும் காணிக்கை செலுத்தி வழிபட்டனர். இதே போன்று கிருஷ்ணாபுரத்தில் உள்ள தெய்வ நிலையத்தில் காலையில் இருந்து சிறப்பு வழிபாடு, தியானம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.