உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

ராமேஸ்வரம்: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து தீர்த்த கடலில் புனித நீராடினர். பின்னர் கோயில் வளாக 22 தீர்த்தங்களில் நீராடிவிட்டு சுவாமி, அம்மனை தரிசித்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Gayathri Rajaraman
மே 05, 2025 19:50

ஆம் இது 100 சதவீதம் உண்மை நேற்று தான் சென்று வந்தேன் ஒரு நபருக்கு 22 தீர்த்த நீர் ஊற்ற ரூபாய் 300 நாங்கள் 20 பேர் சென்றோம் அங்கே தான் எல்லோரும் சென்றனர் எங்களுக்கும் குழந்தைகளை வைத்து கொண்டு வேறு வழி இல்லாமல் அவ்வாறே சென்றோம் .


Krishnamoorthy Caa
மே 05, 2025 09:26

வணக்கம். கோவிலின் உள்ளே இருக்கும் சிலைகள் மட்டும் தான் காசு கேட்கவில்லை. பணம் தின்னும் பிசாசுகள் தான் கோவில் முழுக்க. தீர்த்த நீராடும் இடத்தில் மிக பெரும் அளவில் முறைகேடு, அரசு அனுமதி சீட்டு பெற்று சென்றாலும் தண்ணீர் ஊற்றுவது இல்லை. தலைக்கு இவ்வளவு காசு என்று அங்கே இருக்கும் நபர்களிடம் கொடுத்தால் மட்டுமே தீர்த்தம். முறைகேடான வழியில், இந்த பணம் தின்னும் பிசாசுகளிடம் காசு கொடுத்து சென்றால் பாவம் எப்படி நீங்கும் ? அணைத்து தீர்த்தத்தையும் இணைத்து இயந்திரமயமாக்கினால், அதாவது மோட்டர் மூலம் தண்ணீர் தெளிவிக்க ஏற்பாடுகள் செய்தல் பிரச்சனைகள் தீர வாய்ப்பு உண்டு. தமிழ் தெரியாத வடநாட்டு பக்தர்களை , முரட்டு தனமாக திட்டி அவமான படுத்துகிறார்கள். காசுக்கு மட்டுமே அங்கே மதிப்பு. இதை தினமலர் முன்னெடுக்க வேண்டும்


அப்பாவி
மே 05, 2025 17:14

ராமேஸ்வரம் மட்டுமல்ல. எல்லா கோவில்களிலும் ஜாதி பேதமில்லாமல் கொள்ளை, ஆட்டை உருவல்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை