உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திற்கு பொறுப்பு டிஜிபி நியமனம்; யார் இந்த வெங்கட்ராமன்?

தமிழகத்திற்கு பொறுப்பு டிஜிபி நியமனம்; யார் இந்த வெங்கட்ராமன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக போலீசின் நிர்வாகப் பிரிவு டிஜிபி.,ஆக பதவி வகித்து வரும் வெங்கட்ராமனுக்கு கூடுதலாக டிஜிபி பதவி (பொறுப்பு) வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பணிபுரிந்து வரும் சங்கர் ஜிவால், இன்றுடன் (ஆக.31) ஓய்வு பெறுகிறார். சங்கர் ஜிவால் ஓய்வு பெற உள்ளதால், புதிய சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியல், டி.ஜி.பி., அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=61sm0yed&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில், 11 அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. முதல் மூன்று இடங்களில், தற்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி.,யாக உள்ள சீமா அகர்வால், ஆவின் விஜிலென்ஸ் முதன்மை அதிகாரியாக உள்ள டி.ஜி.பி., ராஜீவ் குமார், போலீஸ் அகாடமி இயக்குநர், டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோட் பெயர்கள் உள்ளன.இந்த பட்டியலில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, டிஜிபியாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்வு நடைமுறை நிறைவடையாத காரணத்தால் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.அதன்படி தற்போது டி.ஜி.பி., அலுவலகத்தில், நிர்வாகப்பிரிவு டி.ஜி.பி.,யாக பணியாற்றி வரும் வெங்கட்ராமன், பொறுப்பு டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

யார் இந்த வெங்கட்ராமன்?

* கடந்த 1994ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான, இவர் சைபர் குற்றப்பிரிவு உட்பட, பல பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.* 2001ல் சிபிஐ சென்னை எஸ்பியாக பணியாற்றியவர். அதிலேயே 2008ல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.* 2009ல் தமிழக காவல் துறையில் சிபிசிஐடி டிஐஜியாக இருந்தவர். 2012ல் ஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.* 2019ல் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, சைபர் கிரைம் தலைமையகம், நிர்வாக பிரிவுகளில் பணியாற்றினார்.*2024ல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றவர். சட்டம் ஒழுங்கு கூடுதல் பொறுப்பு டிஜிபியாக பணியாற்றி வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

V Venkatachalam
ஆக 31, 2025 20:02

ஓங்கோல் கூட்டத்துக்கு ஒத்துப்போறவர்தானே இவர்.‌அதுல மக்களுக்கு இன்னா நன்மை இருக்கப் போவது.


என்றும் இந்தியன்
ஆக 31, 2025 18:50

போலி is என்று திருட்டு திராவிட அறிவிலி மடியில் அரசில் இந்த துறை புகழ் பெறுகின்றது இந்த துறையின் பெயர் மாற்றம் இப்படி செய்யப்பட்டிருக்கின்றது டாஸ்மாக்கினாட்டு திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு ஏவல் துறை


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 31, 2025 15:48

பொறுப்பு டிஜிபியா அல்லது வெறுப்பு டிஜிபியா? பொறுத்திருந்து பார்த்தால் வெறுத்துப்போவோம்.


balasubramanian
ஆக 31, 2025 15:19

யாராய் இருந்தால் என்ன


Gurumurthy Kalyanaraman
ஆக 31, 2025 15:07

எங்கடா இந்த ஆராய்ச்சி இன்னும் ஆரம்பிக்க வில்லையே என்று நினைச்சேன். ஆரம்பிச்சுட்டியே கிரேட்


HoneyBee
ஆக 31, 2025 14:45

ஒரு டிஜிபி தேர்வு செய்ய இவ்வளவு நாட்களா???


Artist
ஆக 31, 2025 14:43

அவாளா ?


Anantharaman Srinivasan
ஆக 31, 2025 15:17

ஏன் உங்க ஆளைவைச்சு நாறணுமோ..?


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 31, 2025 13:17

ஜால்ரா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை